/* */

கூடுதல் பேருந்து இயக்க கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் திருமானூரில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்.

HIGHLIGHTS

கூடுதல் பேருந்து இயக்க கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
X

திருமானூரில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.


அரியலூர் மாவட்டம் திருமானூரில், காலை,மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி பள்ளி,கல்லூரி மாணவர்கள் பேருந்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த 4 நாட்களாக விடுமுறை என்பதால், சொந்த ஊர் திரும்பியிருந்த பள்ளி,கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களில் வேலை செய்வோர் என அனைவரும் இன்று காலை பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு திரும்பினர். இதனால் அனைத்து பேருந்துகளும் இன்று காலை கூட்டமாக காணப்பட்டது. இதனால் சில பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் நிற்கமலேயே சென்றது. சில பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தை தாண்டி சிறிது தூரம் சென்று நின்று சென்றது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ,மாணவிகள் அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில், அவ்வழியே சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து நிறுத்தத்தில் ஏன் நிற்காமல் செல்கிறீா் எனவும், மாணவர்கள் பள்ளி,கல்லூரி சென்று வரும் வகையில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த திருமானூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மாணவ,மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 18 April 2022 1:21 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  2. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  3. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  4. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  5. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  6. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  9. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  10. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!