/* */

தொடர்மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

மணல்கடத்தலில் ஈடுபட்ட ரமேசை ஒரு வருடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

தொடர்மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
X

மணல் கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தில்  கைது செய்யப்பட்டார்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ரமேஷ் (26). இவர் கடந்த சில வருடங்களாக தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே தலைமறைவாக இருந்த ரமேசை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று விக்கிரமங்கலம் பொறுப்பு காவல் ஆய்வாளர் சுமதி கைது செய்தார்.

ரமேஷ் என்பவர் வெளியில் இருந்தால் மீண்டும் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுவார் என்பதால், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில், மணல் கடத்தலில் ஈடுபட்ட ரமேசை ஒரு வருடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரமேசிடம் வழங்கப்பட்டது.

Updated On: 19 Oct 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்