/* */

காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின்மேல் சூரியஒளி விழுந்த அபூர்வ காட்சி

தா.பழூர் அருகே காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி நிகழ்ந்தது.

HIGHLIGHTS

காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின்மேல் சூரியஒளி விழுந்த அபூர்வ காட்சி
X

தா.பழூர் அருகே காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி நிகழ்ந்தது.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட சவுந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 5ம் தேதி முதல்10ம் தேதி வரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.

தமிழ்மாதத்தில் சித்திரை மாதம் தொடக்கம் என்பதால் இம்மாதத்தில் சூரியபகவான் ஈசனை வழிபடுவதாக ஐதீகம். அதன்படி இன்று காலை சூரிய உதயத்தின்போது அதிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது.

இந்தநிகழ்வு சித்திரை 10ம் தேதி வரை நீடிக்கும் என்று கோவில் வழிப்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். அப்போது லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வகாட்சி சூரிய உதயத்திற்கு முன்னதாக கோயிலுக்கு வந்து சூரிய ஒளியோடு இறைவனை தரிசிப்பது அபூர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வருடத்தில் இரண்டு மாதங்களில் இந்த நிகழ்வு நடைபெறும்.

இதனை சுற்று பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

Updated On: 20 April 2022 6:29 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...