/* */

ரமலான் பண்டிகை: அரியலூர் வாரச்சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

அரியலூர்- ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை மந்தம் களையிழந்த வாரச்சந்தை.

HIGHLIGHTS

ரமலான் பண்டிகை: அரியலூர் வாரச்சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
X

ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்குரோட்டில் வார சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை குறைவாக நடந்ததால் உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்குரோட்டில் வார சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனைக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் வியாபாரம் இல்லாமல் களையிழந்ததால் உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வருகின்ற 3ம் தேதி இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து, ரமலான் முதல் நாளில் இரவு பிறை தெரிந்தவுடன் வழிபாடு செய்து, ரமலான் அன்று ஆட்டு இறைச்சியை தானமாக வழங்கி கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் நடைபெரும் வாரச்சந்தையில் இன்று வழக்கத்தை விட குறைவாகவே ஆடுகள் விற்பனைகாக வந்துள்ளது. இதில் ஆண்டிமடம், காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரத்திற்காக பொதுமக்கள் ஆடுகளை வாகனங்களில் கொண்டு வந்தனர். அதிகாலை முதலே சந்தையில் ஆடுகள் விற்பனை துவங்கியது. இதில் வியாபாரிகள் பொதுமக்கள் என சுமார் 100பேர் மட்டுமே வந்து இருந்தனர்.

ரம்ஜான் பண்டிகை நாளில் மட்டும் குறுரோடு வார சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் அதிக அளவில் வியாபாரிகள் வராததால் 30 லட்சத்துக்கு மட்டுமே ஆடுகள் விற்பனைக்கு ஆகியது. இதனால் இந்த வார சந்தையில் வியாபாரம் சரிந்தது என வருத்தத்துடன் பொதுமக்கள் தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ரமலான் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு நடைபெறாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 May 2022 5:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  2. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  3. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  5. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
  6. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  10. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...