/* */

அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடி திருவாதிரை விழா ஆலோசனை கூட்டம்

ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் அமைச்சர் சிவங்கர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடி திருவாதிரை விழா ஆலோசனை கூட்டம்
X

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆடித் திருவாதிரை விழா - 2022 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவங்கர் துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சுற்றுலாத்துறை - மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடித் திருவாதிரை விழா - 2022 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர்.சிவங்கர் இன்று துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில், கலெக்டர் ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவங்கர் பேசியதாவது:-

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக புகழ் பெற்ற அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவிய மாமன்னர் இராஜேந்திர சோழன் ஆவார். அரியலூர் மாவட்டம் முதல் பெரம்பலூர் மாவட்டம் வரை நகரங்கள், கிராமங்களை உருவாக்கிய மாமன்னர் மற்றும் இந்தியாவை தாண்டி அயல் நாடுகளையும் வென்று தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திய மாமன்னர் இராஜேந்திர சோழன் ஆவார். மாமன்னர் இராஜராஜசோழனின் மகனான மாமன்னர் இராஜேந்திர சோழன் பல்வேறு நாடுகளை வென்று மிகவும் சிறப்புடன் ஆட்சி செய்தவர்.

தஞ்சையில் மாமன்னர் இராஜராஜ சோழனுக்கு ஆண்டு தோறும் அரசு சார்பில் சதயவிழா கொண்டாடுவதைப் போல நம் மாமன்னர் இராஜேந்திர சோழனுக்கும் அரசு விழா கொண்டாட வேண்டும் என்பது இப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் நீண்ட காலக் கோரிக்கையாகும். பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாமன்னர் இராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவான ஆடித் திருவாதிரை விழாவினை அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளார்கள். சென்ற ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக இவ்விழா கொண்டாடப்பட இயலவில்லை.

இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வெகு விமரிசையாக வருகின்ற 26.07.2022 அன்று கொண்டாடப்படவுள்ளது. அதன் அடிப்படையில் ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துறை சார்ந்து ஒதுக்கப்பட்டுள்ள விழாத் தொடர்பாக பல்வேறு பணிகளை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி பொதுமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், நமது மாமன்னர் இராஜேந்திர சோழன் அவர்களின் சிறப்பை வருங்கால சந்ததியினர் அறிந்து பயன்பெறும் வகையிலும் கங்கைகொண்ட சோழபுரம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சாத்தனூர் கல்மரம், தொல்லியல் ஆய்வகம் போன்ற பல்வேறு சுற்றுலா தளங்களை பிரபலப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்வதன் மூலம் வரும் ஆண்டுகளில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவிற்கு தொடர்ந்து வருவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மாவட்ட நிலை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை அனைவருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மாவட்ட சுற்றுலா அலுவலர் க.நெல்சன், உதவி சுற்றுலா அலுவலர் ரா.கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 14 July 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  2. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  3. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  5. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
  6. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  10. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...