/* */

பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட செவிலியர்கள்

ஜெயங்கொண்டம் அரசுமருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்கள் பணி நீட்டிப்பு வழங்க வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

பணி நீட்டிப்பு வழங்க கோரி  ஆட்சியர் அலுவலகத்தை   முற்றுகையிட்ட செவிலியர்கள்
X

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா இரண்டாம் அலையின் போது தற்காலிக பணியாளர்களாக சுமார் 20 செவிலியர்கள்பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அரசு மருத்துவமணையில் தற்காலிகமாக கொரோனா இரண்டாம் அலையின் போது பணியாற்றிய செவிலியர்கள் பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், கொரோனா இரண்டாம் அலையின் போது, தற்காலிக பணியாளர்களாக சுமார் 20 செவிலியர்கள் பணிபுரிந்தனர். செவிலியர்கள் 90 நாட்களுக்கு பணியாற்றிய பிறகு, தொடர்ந்து செவிலியர் பணியாற்றிட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. செவிலியர்கள் பணியாற்றிய காலங்களில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. ஊக்கத்தொகையும் இல்லாமல் பணி செய்து வந்த செவிலியர்களுக்கு, தற்போது பணி நீட்டிப்பும் வழங்கவில்லை . தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய வேலையை விட்டு விட்டு அரசு பணிக்கு வந்த நிலையில், தற்போது பணி நீட்டிப்பு இல்லை என்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எனவே, தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க கோரியும், மூன்றுமாத ஊதியத்தை வழங்க ஆனைபிறப்பிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை செவிலியர்கள் முற்றுயிட்டனர். பின்னர் கோரிக்கைகனை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, செவிலியர்கள் தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் வழங்கிவிட்டு கலைந்துசென்றனர்.

Updated On: 16 Aug 2021 9:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்