/* */

அரியலூர்: புதிய பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ வேலு ஆய்வு

திருமானூர் அருகே புதிய பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர்: புதிய பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ வேலு ஆய்வு
X


ஏலாக்குறிச்சி பிரிவு சாலையில் நடைபெற்று வரும்  பாலம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு..





அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த முடிகொண்டான் கிராமம் அருகே ஏலாக்குறிச்சி பிரிவு சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல் திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பில் புதிதாக கல்வெட்டு பாலம் மற்றும் சாலை மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர்

முதல்வரின் உத்தரவுக்கு இணங்க நான் செல்லும் வழிகளில், சாலைகள் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்து வருகிறேன். இன்று (நேற்று) 3 இடங்களில் ஆய்வு செய்தேன். சாலைகள் தரமாக உள்ளது.தற்போதைய பட்ஜெட்டில் ரூ18,000 கோடி பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை நடப்பாண்டிலேயே செலவு செய்து சாலை அமைத்தால் தான் தரமாக இருக்கும். கிடப்பில் போடப்பட்டால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து விடும். ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட ஒப்பந்த நாட்களில் பணியினை முடிக்க வேண்டும். முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருவழிச்சாலைகளை நான்கு வழிச்சாலையாக உயர்த்த நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 32 இடங்களில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, உதவி கோட்ட பொறியாளர் சிட்டிபாபு, உதவி பொறிளாளர் இளையபிரபுராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 20 March 2022 9:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்