/* */

அரியலூர் மாவட்டத்தில் வேப்ப மரம் வெட்டிய தகராறில் 6 பேர் மீது வழக்கு

அரியலூர் மாவட்டத்தில் வேப்பமரம் வெட்டிய தகராறு தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் வேப்ப மரம் வெட்டிய தகராறில் 6 பேர் மீது வழக்கு
X
சித்தரிக்கப்பட்ட படம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தெற்கு நரியங்குழி கிராமம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சாமிதுரை ( 53) விவசாயி.அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (55) விவசாயி. இவர்கள் இருவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ராஜலிங்கம் மற்றும் சாமிதுரை இருவருக்கும் பொதுவான வேப்ப மரத்தில் ராஜலிங்கம் தழை வெட்டியதாக கூறப்படுகிறது. அப்பொழுது சாமிதுரை இருவருக்கும் பொதுவான மரத்தில் தழை வெட்ட கூடாது என்று கூறியுள்ளார். இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த ராஜலிங்கம் மனைவி வளர்மதி மகன் ராஜ்குமார் மற்றும் சாமிதுரை இவரது மகன் சின்னதுரை உறவினர் பழனிச்சாமி ஆகியோரும் அங்கு வந்துள்ளனர். அப்பொழுது மீண்டும் இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்பு வாய்த்தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் ராஜலிங்கம் மற்றும் சாமிதுரை கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருணாநிதி ராஜலிங்கம், வளர்மதி , ராஜ்குமார், சாமிதுரை, சின்னதுரை, பழனிச்சாமி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 14 Nov 2021 9:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...