/* */

அரியலூர் மாவட்டத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவமுகாம்கள் தொடக்கம்

அரியலூர் மாவட்டத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவமுகாம்கள் தொடக்கம்
X

அரியலூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு மருத்துவமுகாமை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், சேடக்குடிகாடு கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் சிறப்பு மருத்துவ வாகனங்களையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் சார்பில் நாள் ஒன்றுக்கு இரண்டு முகாம் வீதம் 26 மருத்துவக் குழுவினர்கள் நடமாடும் சிறப்பு மருத்துவ வாகனங்கள் மூலமாக 52 இடங்களில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை மருத்துவ சிகிச்சைகள் அளித்திடும் வகையில் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்களிலிருந்து மக்களை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில், கிராமங்கள் தோறும் மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் வியாதி, பூச்சி மற்றும் விலங்குகளால் ஏற்படும் நாய்க்கடி, பாம்புக்கடி, மூச்சுதிணறல், மஞ்சள் காமாலை, உணவு மற்றும் தண்ணீரால் பரவும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மழைக்கால சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது மாவட்டத்தில் 68 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமும், 26 மருத்துவக்குழுவினர்கள் கொண்ட சிறப்பு மருத்துவ வாகனங்களும் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடவுள்ளது.

இதன் மூலமாக மருத்துவக் குழுவினர்கள் கிராமங்கள் தோறும் சென்று காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், மழைக்கால நோய்களிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்துதல், கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துதல், தொற்று நோய் வராமல் தடுக்க சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுதல், மழைநீரில் நனைந்த உணவுப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது,

சித்த மருத்துவர்கள் மேற்பார்வையில் நிலவேம்பு, கபசுரக்குடிநீர் அருந்துதல், சரியான அளவில் குளோரின் கலந்த குடிநீரை பயன்படுத்துதல், வீடுகளிலுள்ள தொட்டிகளில் பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

டயர், உடைந்த மண் பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், அம்மி கல்லு, உடைந்த குடங்கள் உள்ளிடவைகளில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், இதன் மூலம் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய்களை உண்டாக்கும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மருவத்தூர்-விழுப்பணங்குறிச்சி-சேடக்குடிகாடு இடையே 2.350 கி.மீ நீளத்தில் ரூ.86.54 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார்சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி, வட்டாட்சியர் குமரையா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Nov 2021 12:39 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  3. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  4. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  7. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  8. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  9. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  10. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து