/* */

அரியலூர் மாவட்டத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் அறையில் பூட்டி சீல் வைப்பு

அரியலூர் மாவட்டத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் அறைகளில் பூட்டி சீல் வைத்து துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் அறையில் பூட்டி சீல் வைப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகராட்சியில் 18, ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21, உடையார்பாளையம் பேரூராட்சியில் 14, வரதராஜன்பேட்டை பேரூராட்சியில15 ஆக மொத்தம் 68 பதவிகளுக்கு, அரியலூர் நகராட்சியில் 89பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 108 பேரும் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 70 பேரும் உடையார்பாளையம் பேரூராட்சியில் 14 வார்டுகளுக்கு 55 பேரும் சேர்ந்து 322 பேர் போட்டியிட்டனர். இதில் உடையார்பாளையம் பேரூராட்சியில் 13-வது வார்டு வேட்பாளர் மட்டும போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அரியலூர் நகராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஒரு சில இடங்களில் வாக்கு சாவடிகளில் எந்திர கோளாறு ஏற்பட்டு இருந்தாலும் உடனடியாக சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்களில் பெண்களே ஆர்வத்துடன் முன்வந்து வாக்களித்து சென்றனர். இதில் தேர்தல் நடைபெற்ற இடங்களில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, மாவட்ட தேர்தல் பார்வையாளர் பூங்கொடி, மற்றும் காவல் பணிகளில் எஸ். பி. பெரோஸ்கான் அப்துல்லா, ஏ.டி.எஸ்.பி.க்கள் ராஜாராமன், திருமேனி, மற்றும் டி.எஸ்.பி. கலைக்கதிரவன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அரியலூர் நகராட்சி, ஜெயங்கொண்டம் நகராட்சி, மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சி, வரதராஜன்பேட்டை பேரூராட்சி, ஆகியவற்றில் கண்காணிப்பு பணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை மற்றும் ரிசர்வ், உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகராட்சியில் 71.18சதவீதம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 76.44 சதவீதம் வாக்குப்பதிவும் உடையார்பாளையம் பேரூராட்சியில் 82.35 சதவீதம் வாக்குப்பதிவும் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 79.33 சதவீதம் வாக்குப்பதிவும் நடை பெற்றுள்ளது.

பின்னர் பதிவான வாக்கு பெட்டிகளை பூட்டி சீல் வைத்து, அரியலூர் நகராட்சி அலுவலகம் மற்றும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று உடையார்பாளையம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சி அலுவலகத்திலும் பதிவான வாக்குகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On: 20 Feb 2022 9:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!