/* */

அரியலூரில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா: ஆட்சியர் துவக்கி வைப்பு

அரியலூர் ஒற்றுமை திடலில் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்வுகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூரில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா: ஆட்சியர் துவக்கி வைப்பு
X

அரியலூர் ஒற்றுமை திடலில் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்வுகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒற்றுமை திடலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75வது சுதந்திர தின விழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்வுகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று (24.03.2022) துவக்கி வைத்தார்.

இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தேசத்தலைவர்களை போற்றும் வகையிலும், விடுதலைப்போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்படக்கண்காட்சி நடத்தி, அக்கண்காட்சியில் அந்தந்த மாவட்டங்களில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த மற்றும் அறியப்படாத சுதந்திரப்போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், இடம் பெறச்செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்றைய தினம் அரியலூர் ஒற்றுமை திடலில் 75-வது சுதந்திர தின விழா - சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்வுகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த எழில்மிகு புகைப்படக்கண்காட்சியினை திறந்து வைத்து, சுதந்திற்கு பாடுபட்ட தேசத் தலைவர்கள், தமிழ்நாடு மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் மற்றும் தியாகிகள் குறித்த வரலாறுகளை பார்வையிட்டு, எதிர்கால தலைமுறையினர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றியும், அவர்களின் தியாகங்கள் மற்றும் சுதந்திர வேட்கை குறித்து அறிந்து கொள்வதற்கு இப்புகைப்படக் கண்காட்சி வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

பின்னர், கைத்தறித்துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, தமிழ்நாடு மாநில் ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஊகர வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த விளக்க கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி திறந்து வைத்து, பார்வையிட்டார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். இந்த சுதந்திர தின அமுதப் பெருவிழா இன்று (24.03.2022) தொடங்கி 31.03.2022 வரை நடைபெறுகிறது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் மாலை நேரங்களில் கலை குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்து, சுதந்திரப்போராட்ட தியாகிகளின் வரலாறுகளை அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.பூங்கோதை, கோட்டாட்சியர் ஏழுமலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு, நகராட்சி ஆணையர் த.சித்ராசோனியா, நகர்மன்ற உறுப்பினர் ராஜேஸ் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 March 2022 7:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...