/* */

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முத்தமிழ் மன்றம் துவக்கம்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முத்தமிழ் மன்றத்தினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில் முத்தமிழ் மன்றம் துவக்கம்
X

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த விழாவில் முத்தமிழ் மன்றத்தை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் சமுதாயத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை படிக்கும் பொழுதே வளர்த்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டுறவு பண்டக சாலை லிட், முத்துதமிழ் மன்றம் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்கத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

அரசு மருத்துவக் கல்லூரி கூட்டுறவு பண்டகச் சாலையில் முதல் விற்பனையை மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்து பின்னர் இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது:-

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களின் நலன் கருதி மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டுறவு பண்டக சாலை லிட், மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் முத்தமிழ் மன்றம் மற்றும் சேவை மனப்பான்மையை ஊக்குவிக்க இளம் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ மாணவர்களின் உயர்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கு ஏதுவாக முழு உடல் தானம் பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மருத்துவ மாணவர்களை அரியலூர் மாவட்டத்தின் சார்பில் வருக வருக என வரவேற்கிறேன். இந்த அரியலூர் மாவட்டம் என்பது தமிழோடு நீண்ட நெடிய தொடர்பு கொண்ட மண் ஆகும். இந்திய அளவில் முத்திரை பதித்த மாமன்னன் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு இம்மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு காடுகளாக இருந்த இப்பகுதிகளை பொதுமக்கள் வாழும் பகுதிகளாக மாற்றி அமைத்தார். கங்கைவரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று அவற்றின் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரத்தை மாமன்னன் ராஜேந்திரசோழன் நிர்மானித்தார். சமீபத்தில் வெளி வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் மகனாக இருந்த ராஜேந்திரசோழனின் பெருமையை இங்கு கல்வி பயிலும் தாங்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் நாம் நம்முடைய பெருமை, நாம் பேசும் மொழியின் பெருமை போன்றவற்றை தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், பொற்கை போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் இந்திய மண்ணிலே தமிழ் மண்தான் மூத்த மண் என்பது வெளிப்பட்டுகொண்டுள்ளது. இதே போன்று கங்கைகொண்ட சோழபுரம் அருகில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது இந்த மண் எவ்வாறு ஆட்சி செய்யப்பட்டது, எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பது குறித்தும் பல்வேறு சான்றுகள் வெளிப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புமிக்க அரியலூர் மண்ணில் நீங்கள் மருத்துவ கல்வியை பெறும் சிறப்பு பெற்றுள்ளீர்கள். அதே போன்று இம்மாவட்டம் முழுவதும் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்கள் இருப்பதுடன் இக்கோவில் இருக்கும் பகுதியில் பெரும் புலவர்கள் வாழ்ந்து தமிழ் வளர்த்துள்ளார்கள். இது குறித்தும் நீங்கள் அறிந்து தெறிந்து கொள்ள வேண்டும்.

இம்மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று முடித்து வெளியில் செல்லும் போது இச்சமுதாயத்திற்கு உங்களது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை மருத்துவ மாணவர்கள் இப்பொழுதே வளர்த்து கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று சமுதாயத்திற்கு உங்களால் ஆன பங்களிப்பை சிறப்பாக வழங்க வேண்டும் என்று எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொ.சந்திரசேகர், நகர்மன்ற தலைவர் சாந்திகலைவாணன், மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனார்.

Updated On: 13 Oct 2022 12:04 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  2. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  4. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  5. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  7. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
  8. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!