/* */

அரியலூரில் மே 1ல் கிராமசபை கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

மே 1ம்தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க, அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூரில் மே 1ல்  கிராமசபை கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
X

இது தொடர்பாக, அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் 01.05.2022 அன்று காலை 10.00 மணியளவில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அக்கூட்டத்தில் பின்வரும் பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்). ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம். ஊட்டச்சத்து இயக்கம். பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்). விரிவான கிராம சுகாதார திட்டத்தைப் பற்றி விவாதித்தல், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை - உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

எனவே, மேற்காணும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 28 April 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?