/* */

அரியலூர் மாவட்டத்தில் 2-ம் தேதி கிராம சபை கூட்டம்- கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் 02.10.2021 அன்று நடைபெற இருப்பதாக ககெலக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் 2-ம் தேதி கிராம சபை கூட்டம்- கலெக்டர் தகவல்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளில் 02.10.2021 காந்தி ஜெயந்தி அன்று கிராம ஊராட்சித்தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கான தற்செயல் இடைத்தேர்ல் நடைபெறும் ஊராட்சிகள் மற்றும் கொரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட ஊராட்சி பகுதிகள் தவிர, மற்ற ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் காலை 10.00 மணியளவிலிருந்து 01.00 மணிக்குள் அந்தந்த ஊராட்சிகளில் நிர்ணயித்துள்ள பகுதியில் நடைபெறவுள்ளது.

அக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வ மற்றும் பொதுமக்கள் ஈடுபடுதல் குறித்து விவாதித்தல்.

ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், குடிநீரை சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்துதல் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல்.

மக்கள் திட்டமிடல் இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்திட தீர்மானித்தல், ஊட்டசத்து இயக்கம் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் குறித்து விவாதித்தல்.

தற்போது உள்ள பணிகளின் தொகுப்பின் முன்னேற்றத்தினை பகிர்ந்துகொள்ளுதல், 2021-22ஆம் ஆண்டில் சேமிப்பு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் பற்றி விவாதித்தல், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தல்.

திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்கவைத்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் பற்றி விவாதித்தல்.நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், விரிவான கிராம சுகாதார திட்டத்தை பற்றி விவாதித்தல், தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2021 குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்தல்.மின் சிக்கனத்தை கடைபிடித்தல், மின் சிக்கனம் தேவை இக்கனம் குறித்து விவாதித்தல்.ஜல் ஜீவன் திட்டம் குறித்து விவாதித்தல் போன்ற பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

பொதுமக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற பிரதிநிதிகளால் கொண்டுவரப்படும் இதர பொருள்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதால்,அந்தந்த பகுதிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கிராம சபைக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 30 Sep 2021 4:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!