/* */

அரியலூர்:காந்தி ஜெயந்தி பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

அரியலூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர்:காந்தி ஜெயந்தி பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
X

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் ஆசிரியர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவரான மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வறிவிப்பின்படி காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் 02-10-2021–சனிக்கிழமை அன்று அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் அரியலூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ம.இளையராஜா ஒருங்கிணைப்பிலும், தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர்களாலும் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் 110 பேரும், கல்லூரி மாணவ, மாணவிகள் 16 பேரும் பங்கேற்றனர்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில், முதல் பரிசு ச.சபிதா, பணிரென்டாம் வகுப்பு, அரசு மேனிலைப்பள்ளி, திருமானூர்.(ரூ.5,000/-),

இரண்டாம் பரிசு இரா.ஆர்த்தி, பத்தாம் வகுப்பு, அரசு உயர்நிலைப்பள்ளி, நாகமங்கலம்(ரூ.3,000/-),

மூன்றாம் பரிசு மா.மகாலட்சுமி, பணிரென்டாம் வகுப்பு, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, உடையார்பாளையம். (ரூ.2,000/-)

மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டு பேருக்கு சிறப்புப் பரிசாக ரூ.2,000/- என ச.பிரபாகரன், பணிரென்டாம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, காமரவல்லி, மற்றும் ப.ரம்யா, பதினோராம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டிமடம்.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில்,

முதல் பரிசு ப.பவித்ரா, இளங்கலை தமிழிலக்கியம், மூன்றாம் ஆண்டு, மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர் (ரூ.5,000/-),

இரண்டாம் பரிசு சா.ரோஜா, முதுகலை தமிழியல் துறை, இரண்டாம் ஆண்டு, அரசு கலைக்கல்லூரி, அரியலூர் (ரூ.3,000/-).

மூன்றாம் பரிசு ஜா.இவாஞ்சலின் கார்மைக்கேல், மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி, தத்தனூர் (ரூ.2,000/-)

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் மாவட்ட ஆட்சியரால் விரைவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Updated On: 5 Oct 2021 3:34 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...