/* */

ஜெயங்கொண்டத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தீ தொண்டு வார விழிப்புணர்வு செயல்முறை விளக்கம்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு
X

ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தீ தொண்டு வார விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு தீத்தடுப்பு குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி மும்பையில் நடந்த தீ விபத்தில் 66 தீயணைப்பு வீரர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். இந்த தீ விபத்தில் இறந்து போன தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு தீ தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் நர்சிங் கல்லூரியில் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் குழுவாக இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்து மாணவர்களை செய்யச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் தீவிபத்தில் மாடி கட்டிடத்தில் தீக்குள் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, விபத்தில் காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் இருப்பவரை எப்படி தூக்குவது, காப்பாற்றுவது, தீப்பற்றினால் அதனை எவ்வாறு அனைப்பது உள்ளிட்டவைகள் பற்றி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறி செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு பயனடைந்தனர்.

Updated On: 21 April 2022 8:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  3. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  4. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  5. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  6. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  7. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  8. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  9. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  10. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...