/* */

அரியலூரில் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை

அரியலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்யவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

அரியலூரில் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை
X

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் உர இருப்பு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 1339 டன் யூரியா, 856டன் டி.ஏ.பி., 624 டன் பொட்டாஷ், 2411 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 356 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் செப்டம்பர் மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட யூரியா உரம் 2460 மெ.டன்களில் இதுவரை 1440 டன்கள் வந்துள்ளது. இதுவரை யூரியா 1057 மெ.டன்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மாதம் 1000 மெ.டன்கள் கூடுதலாக பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


    • உயிர் உரங்களான அசோஸ் பயிரிளம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் பொட்டாஷ் பாக்டீரியா இவைகள் அனைத்தும் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் அதிக அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய உயிர் உரங்களை விதை நேர்த்தி மற்றும் எருவுடன் கலந்து மண்ணுக்கு இடும்போது ஆகாயத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு வழங்குகிறது மற்றும் மண்ணில் உள்ள பயன்பாடு அற்ற பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துக்களை பயிருக்கு கிடைக்கும் வகையில் மாற்றம் செய்கிறது. ஆகவே உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் உரத்தேவைகளை குறைத்து கொள்ளலாம்.
    • விவசாயிகள் தங்கள் பயிருக்கு களைக்கொல்லியை பயன்படுத்தும் போது யூரியாவுடன் கலந்து பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் தவறான முறையாகும். மேல் உரமாக யூரியா கிடைக்காத சமயத்தில் மேல் உரமாக 10:26:26, 12:32:16, 16:16:16, 17:17:17, 15:15:15 போன்ற காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் இப்கோ விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களில் மத்திய அரசு கூட்டு நிறுவனமான இப்கோ உற்பத்தி செய்யப்படும் நானோ யூரியா அதிகளவு இருப்பில் உள்ளது. இத்தகைய நானோ யூரியாவை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ½ லிட்டர் பயன்படுத்துவதன் மூலம் யூரியா தட்டுப்பாட்டை சரிசெய்யலாம். மண்ணில் நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளால்தான் செயற்கையான உரங்களை பயிர் எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிர்கள் குறைவதால் பயிருக்கு இடப்படும் அனைத்து செயற்கை உரங்களும் பயிருக்கு கிடைக்காமல் ஆவியாகவும் மண் துகள்களுக்கு இடையில் கிடைக்கா வண்ணம் கரைந்து விடுகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் உயிர் உரங்களையும் இயற்கையாக கிடைக்கும் உரங்களையும் அதிகளவு பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும்.
    • அரியலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது.
    • விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாகவும் மற்றும் இணை உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும். விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது.திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடரப்படும். விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும்போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் பெற்றுக்கொண்டு உரிய பட்டியல் கேட்டு பெற வேண்டும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிக பட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு 9487073705 அரியலூர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் 9443180884, திருமானூர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் 9443674577, செந்துறை, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) 9884632588, ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் 9750890874, ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் 9486164271, தா.பழூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் 8248928648 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
    • எனவே, அரியலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 ஆகியவற்றை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Updated On: 4 Oct 2022 8:28 AM GMT

    Related News