/* */

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர் மனுக்கள் ஏற்பு

அரியலூர் சட்டமன்ற தொகுதிகள் தாக்கல் செய்யப்பட்ட 22 வேட்பாளர்கள் மனு பரிசீலனையில் 13 பேர் போட்டியிட தேர்வு

HIGHLIGHTS

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர் மனுக்கள் ஏற்பு
X

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். மனுவின் மீது எடுக்கப்பட்ட பரிசீலனையில் 13 பேர் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு 22 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களின் மீதான பரிசீலனை அரியலூர் ஆர்.டி .ஓ அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. அரியலூர் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏழுமலை வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் பரத் யாதவ் முன்னிலை வகித்தார்.

வேட்புமனு பரிசீலனையில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜவகர், அதிமுக வேட்பாளர் அரசுகொறடா தாமரை.ராஜேந்திரன், திமுக வேட்பாளர் சின்னப்பா, அமமுக வேட்பாளர் மணிவேல், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சுகுணாகுமார், பகுஜன் சமாஜ் பர்டி வேட்பாளர் சவரினந்தம், தமிழ்நாடு நல்லாட்சி கூட்டமைப்பு வேட்பாளர் தங்க சண்முகசுந்தரம் ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்கள் மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இவர்கள் ஏழு பேரின் மனுக்களுடன் ஆறு சுயேட்சைகளின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சுயேச்சை வேட்பாளர் அன்பழகன் என்பவர் மனு குறைபாடுடன் இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களுக்கான சின்னங்கள் அறிவிப்பு இன்று மதியம் 3மணிக்கு நடைபெறுகிறது.


Updated On: 20 March 2021 7:13 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  7. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  8. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  9. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!