/* */

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள்: கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலனுக்காக சேவையாற்றிய நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்கள் தமிழக அரசு வழங்கும் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள்: கலெக்டர் தகவல்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி

அரியலூர் மாவட்ட கலெக்டர் .ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

சுதந்திர தின விழா 2021 அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் , நிறுவனங்களுக்கு தமிழக அரசின் விருதுகள் 15.08.2021 அன்று நடைபெறும் சுதந்திர தின விழா 2021 அன்று தமிழக முதலமைச்சரால் கோட்டை கொத்தளத்தில் வழங்கப்படவுள்ளது.

எனவே அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கிட மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்த தொண்டு நிறுவனம் (10 கிராம் தங்க பதக்கம், ரூ.50,000/- ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்), மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்த மருத்துவர் (10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்),

மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாயப்பு அளித்த தனியார் நிறுவனம் (10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்), சிறந்த மத்திய கூட்டுறவு வங்கி (10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்), மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்த சிறந்த சமூக பணியாளர்கள் (10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்), 28.06.2021-க்குள் விண்ணப்பிக்கமாறு அரியலூர் மாவட்ட பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...