/* */

அரியலூர்: வளர்ச்சி பணிகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு செய்தார்

அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களில் வளர்ச்சிபணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர்: வளர்ச்சி பணிகளை  கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு செய்தார்
X

அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் திருமானூர் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களுக்குட்பட்ட கீழப்பழூர், மேலப்பழூர், ஏலாக்குறிச்சி, செங்குழி உள்ளிட்ட பகுதிகளில் சாலை வதசி மேம்பாடு, வீடு கட்டும் திட்டம், தடுப்பணை கட்டுதல், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, கீழப்பழூர் ஊராட்சியில் காந்தி நகர் பகுதியில் ரூ.5.25 இலட்சம் மதிப்பில் சமுதாய கழிவறைப் பணிகளையும், அண்ணாநகர் பகுதியில் ரூ.10 இலட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தோக்கத் தொட்டியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், போதுமான அளவில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறதா என்பது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். கிராமப்புறங்களில் சுகாதாரத்தின் முழுமையாக பேணுவதில் முக்கிய பங்காற்றும் சமுதாய கழிவறைகளை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்தவும், முறையாக கழிவறைகளை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு விதமான நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, கவிதா என்பவரால் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பசுமை வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், வீட்டின் கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து அதன் பயனை பெற வீட்டின் உரிமையாளரிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மேலப்பழூர் ஊராட்சியில் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் 700 இல்லங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் தனிநபர் இல்லங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின்கீழ் முடிவுற்ற 450 பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கீழையூரில் இருந்து பாப்பான் ஏரிக்கு செல்லும் கால்வாய் சீரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், பணியாளர்களிடம் முறையாக ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, ரூ.17.64 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஏலாக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலத்தையும், ரூ.6.17 இலட்சம் மதிப்பீட்டில் காட்டு ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், இத்தடுப்பணையின் மூலம் அதிக அளவு மழைநீரை சேமிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவ அறிவுறுத்தினார். மேலும், கரையான் குறிச்சியில் கலைசெல்வி என்பவரால் கட்டப்பட்டு வரும் பசுமை வீடு கட்டும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க பயனாளிகளிடம் அறிவுறுத்தினார்.

தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட செங்குழியில் சின்னதம்பி படையாட்சி ஏரிக்கு செல்லும் வரத்துவாய்க்காலில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் சீரமைக்கும் பணிகளையும், பசுமை வீடு கட்டும் பணிகளையும் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த அனைத்து அலுவலர்களும் பாடுபடவேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, பிரபாகரன், அகிலா, செந்தில் உடனிருந்தனர்.

Updated On: 24 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  5. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  7. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  10. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து