/* */

அரியலூரில் 27 சுற்றுகளாக எண்ணப்படும், மேஜை 14 ஆக குறைகிறது கலெக்டர் தகவல்

பதிவான வாக்குகள் அனைத்தும் 14 மேஜை மூலமாக 27 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்தார்.

HIGHLIGHTS

அரியலூரில் 27 சுற்றுகளாக எண்ணப்படும், மேஜை 14 ஆக குறைகிறது கலெக்டர் தகவல்
X

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுபாபட்டுக் கருவி, வி.வி.பேட் ஆகியவை கீழப்பழுவூர், அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாக்குகள் அனைத்தும் வருகின்ற 02.05.2021 அன்று எண்ணப்பட உள்ளன. அதன்படி தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சட்டமன்ற தொகுதிக்களுக்கான வாக்கு எண்ணும் பணிகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் த.ரத்னா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்ததாவது,

வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணும் நடைமுறைகள் முழுவதுமாக கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்படவுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் பணிகளில் ஒவ்வொரு மேஜைக்கும் வட்டாட்சியர் நிலையில் ஒரு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் மற்றும் இரண்டு வாக்கு எண்ணும் உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், அந்தந்த உதவி தேர்தல நடத்தும் அலுவலரால் அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விவரம் அறிவிப்பு பலகையில் எழுதப்படும். ஒவ்வொரு சுற்றுக்கான விவரம் அந்தந்த வேட்பாளர் முகவர்களுக்கு வழங்கப்படும். இந்த விவரங்கள் ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் கைபேசிகளை கண்டிப்பாக கொண்டு செல்ல கூடாது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் அவர்களுக்குண்டான அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும். மேலும் 02.05.21 அன்று காரல 08.00 மணிக்கு முன்னர் வரை பெறப்படும் அனைத்து அஞ்சல் வாக்குச்சீட்டுகளும் தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜையில் எண்ணப்படும்.

அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 376 வாக்குச்சாவடி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 377 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் 14 மேஜை மூலமாக 27 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க அனைத்து வேட்பாளர்கள், முதன்மை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணுகை முகவர்கள் கட்டயம் ஸிஜி-றிசிஸி சோதவீனையினை 30.04.21 அன்று கண்டிப்பாக மேற்கொண்டு, கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு வருகைத்தரும் அனைத்து நபர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை சுமுகமாக நடத்திட அனைத்து நபர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்தார்.

Updated On: 22 April 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்