/* */

வாக்கு எண்ணிக்கை அரசு அலுவலர்கள் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

வாக்கு எண்ணிக்கை அரசு அலுவலர்கள் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
X

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பெட்டிகள் கீழப்பழூவூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவையின் வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே மாதம் 2ம்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் அனைவரும் கட்டாயம கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்றுஇல்லை என்பதை உறுதிசெய்தவர்களை மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்க தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

இதனையடுத்து அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் அரசு அலுவலர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சி முகவர்களுக்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாமில் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசியல் கட்சி முகவர்களுக்கு பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Updated On: 29 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!