/* */

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கலெக்டர் அறிவிப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 400 பயிற்சி பெற்ற முன்களப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக அரியலூர் கலெக்டர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கலெக்டர் அறிவிப்பு
X

கொள்ளிடம் ஆறு.

அரியலூர் மாவட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 400 பயிற்சி பெற்ற முன்களப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஏற்கனவே எட்டியுள்ளதைத்தொடர்ந்து, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் சுமார் 140000 கன அடி அளவிற்கு திறந்துவிடப்பட்டு, தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலை உள்ளது. இதன்காரணமாக, கொள்ளிடம் ஆற்றில்நீர்வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும் கரையோர கிராமங்களில் உள்ள வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்பற்ற கரையோர பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்கள் 'செல்பி" எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில்; அதிகளவு நீர் வந்துகொண்டிருப்பதால் அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும் நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்கவும் வேண்டும் எனவும் பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள திருமானூர் ஜெயங்கொண்டம் தா.பலூர் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் 21 கிராமங்கள் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 400 முன்களப்பணியாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அந்தந்த கிராமங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் தங்க வைப்பதற்காக பள்ளிக்கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ஜெனரேட்டர் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தண்டோரா போடுவது நிறுத்தப்பட்டு தற்பொழுது வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கி வழியாக அறிவிப்புகள் சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருவாய்த்துறை காவல்துறை பொதுப்பணித்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட நான்கு துறைகளில் அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளின் போது அதிகம் பயிர்கள் சேதம் அடைவதால் அதனை குறித்து கணக்கெடுக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது தயார் நிலைகள் அவர்கள் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உடனடியாக அங்கிருந்து அறவைக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்க வைப்பதற்கு தேவையான இடம் உணவு ஆகியவற்றை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் தேவையான அளவு தயார் நிலையில் வைப்பதோடு நியாய விலை கடைகளிலும் பொருள்கள் இருப்பு பட்டுள்ளது. இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

Updated On: 4 Aug 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!