/* */

அரியலூர்: கலெக்டர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம்

அரியலூர் கலெக்டர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க வடகிழக்கு பருவமழை மற்றும் கால்வாய், மழைநீர் வடிகால்கள் மாபெரும் தூய்மைப்படுத்தும் முகாம் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடந்தது.

கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-

எதிர் வரும் பருவ மழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம் என அறிவித்து, ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களை 100 சதவீதம் தூர்வாரிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் அனைத்தையும் பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால் மற்றும் சிறிய மழைநீர் வடிகால் என வகைப்படுத்தி தூர்வாரும் பணி மேற்கொள்ள கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரிய மழைநீர் வடிகாலில் கனரக வாகனங்கள் மூலமாகவும், நடுத்தர மற்றும் சிறிய வடிகாலில் ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை கொண்டு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடிகால்களில் படிவுகளை அகற்றவும், வடிகால்களில் தலைப்பு பகுதி முதல் இறுதிப்பகுதி வரை அனைத்து பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளவும். பணிகள் மேற்கொள்ளும்போது பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பணியாளர்களுக்கு தேவையான தளவாட சாமான்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. உள்ளாட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஆறு நாட்களுக்குள் பணிகளை முடிப்பதற்கு ஏதுவாக பகுதிகளைப் பிரித்து பணிகள் மேற்கொள்ளவும், பணிகள் மேற்கொண்ட விவரங்கள் குறித்து உரிய படிவத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

சாலைகளில் உள்ள சிறு பாலங்களை கணக்கிட்டு அதில் படிந்துள்ள படிவுகளை அகற்றி கழிவுநீர் மற்றும் மழை நீர் தடையின்றி செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு மழைநீர் கால்வாய்களில் குப்பைகளை கொட்ட கூடாதென விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைகளில் சேர்ந்துள்ள படிவுகளை தகுந்த உபகரணங்களைக் கொண்டு அகற்றவும், பாதாள சாக்கடை பணிக்கு தேவையான அனைத்து இயந்திரங்களையும் பழுது நீக்கம் செய்து தயார் நிலையில் வைத்திட வேண்டும்

இத்திட்டத்தினை வரும் ஒரு வாரத்தில் முழுமையாக செயல்படுத்துவதன் மூலமாக கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்கள் பயன்படுத்துவதன் மூலம் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவது தவிர்க்கப்படுவதுடன், கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்களில் தேங்கி நிற்கும் நீரினால் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று தடுக்கப்படும் .

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்ஆய்வு கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Sep 2021 7:17 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...