/* */

மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணி: மாவட்ட கலெக்டர் ஆய்வு

குடியிருப்புகளை சுற்றி பெய்யும் மழை நீரானது வடிகால்கள் வழியாக விரைவாக வெளியேற வேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கம்

HIGHLIGHTS

மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்படும்  தூர்வாரும்  பணி: மாவட்ட கலெக்டர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாரணவாசி, பார்பனச்சேரி, மறவனூர், மேலப்பழுவூர் ஆகிய கிராமங்களில் தூர்வாரும்பணியை ஆய்வுசெய்த ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாரணவாசி, பார்பனச்சேரி, மறவனூர், மேலப்பழுவூர் ஆகிய கிராமங்களில் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் கால்வாய், மழைநீர் வடிகால்களில் நடைபெற்று வரும் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க, வடகிழக்கு பருவமழை எதிர் கொள்ளும் வகையில் கால்வாய், மழைநீர் வடிகால்கள்களை தூய்மைப்படுத்தும் பணிகள் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, எதிர் வரும் பருவ மழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களை 100 சதவீதம் தூர்வாரிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால் மற்றும் சிறிய மழைநீர் வடிகால் என வகைப்படுத்தி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாரணவாசி கிராமத்தில் சாலையோரம் மழைநீர் செல்லும் வகையில் ஜெ.சி.பி இயந்திரம் மூலம் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியினைஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், வடிகால்களில் உள்ள கரவேல மரங்களை அகற்றிடவும், குடியிருப்புகளை சுற்றி பெய்யும் மழைநீரானது இவ்வடிகால்கள் வழியாக விரைவாக வெளியேறவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

பார்பனச்சேரி கிராமத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், வடிகால்களில் படிந்துள்ள மணல் மற்றும் கழிவுகளை வெளியேற்றிடவும், வெளியேற்றப்பட்ட கழிவுகளிலிருந்து நோய் தொற்று ஏற்படாதவகையில் அவற்றின்மீது கிருமி நாசினி தெளித்திடவும் அறிவுறுத்தினார். மறவனூர் மற்றும் மேலப்பழுவூர் கிராமங்களில் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் கால்வாய், மழைநீர் வடிகால்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் ஏழுமலை, வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 21 Sep 2021 5:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?