/* */

ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறுகள்

ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசனவசதி

HIGHLIGHTS

ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறுகள்
X

பைல் படம்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பாசனநீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிகபரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனவசதி அமைத்துத் தரப்படும் என மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் பேரவையில் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் பாசனநீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு நிலத்தடிநீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு 09.03.2022 அன்று ஆணைபிறப்பித்தது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், திருமானூர் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய 6 வட்டாரங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 38 கிராம பஞ்சாயத்துகளில் ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரியலூர் வட்டாரத்தில் உள்ள வாலாஜாநகரம், ரெட்டிபாளையம், கடுகூர், ஆலந்துறையார் கட்டளை, எர்த்துக்காரன்பட்டி, காவனூர், நாகமங்கலம், புங்கங்குழி, திருமானூர் வட்டாரத்தில்; உள்ள அழகியமணவாளம், ஏலக்குறிச்சி, கீழகாவட்டடான்குறிச்சி, சின்னபட்டக்காடு, கண்டிராதீர்த்தம், பூண்டி, ஜெயங்கொண்டம் வட்டாரத்தில்; உள்ள தலுதாய்மேடு, குண்டவேலி, முத்துசேர்வமடம், கங்கைகொண்டசோழபுரம், கட்டாகரம்,தத்தனூர், எரவான்குடி,செந்துறை வட்டாரத்தில்; உள்ள மணப்பத்தூர், தலவாய், ஆலத்தியூர், அசவீரன்குடிகாடு, மணக்குடையான், தா.பழூர் வட்டாரத்தில்; உள்ள அம்பாபூர், சிந்தாமணி, தா.பழூர், வேம்புகுடி, பருக்கல் மற்றும் ஆண்டிமடம் வட்டாரத்தில்; உள்ள கூவத்தூர், அழகாபுரம், ஆண்டிமடம், பெரியகிருஸ்ணாபுரம், விலந்தை, இளையூர், சிலம்பூர் ஆகிய 38 பாதுகாப்பான கிராம பஞ்சாயத்துகளில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் அருகாமையிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி பயன் பெறுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் இடத்திற்கு ஏற்றவாறு குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல் நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் இயங்கக் கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அரசு வெளியிட்ட ஆணையின்படி 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கு 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3.0 இலட்சமும், மின்சாரசக்தி மூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்ட பம்புசெட்டுகள் அமைப்பதற்கு ரூ.75ஆயிரமும், நிர்; விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரசக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2.50 இலட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அரசினால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்புசெட்டுகள் நிறவ வேண்டும் என்றால் அதற்கான கூடுதல் செலவினை விவசாயிகளே ஏற்றுக் கொள்ளவேண்டும். பெரிய விவசாயிகளைப் போல, சிறு மற்றும் குறு ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், தமிழ்நாடுஅரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை அறை எண்.26, அரசு பல்துறை அலுவலகவளாகம், ஜெயங்கொண்டம் ரோடு, அரியலூர் - 621 704, அலைபேசிஎண் - 9443399525 மற்றும் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை, வெள்ளை பிள்ளையார் கோவில்தெரு, பரணம் ரோடு, உடையார்பாளையம் - 621 804- அலைபேசி எண்- 9442112969 அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Jun 2022 12:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’