/* */

புகை மாசில்லா போகி பண்டிகை கொண்டாட அரியலூர் கலெக்டர் வலியுறுத்தல்

புகை மாசில்லா போகி பண்டிகை கொண்டாட அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வலியுறுத்தி உள்ளார்.

HIGHLIGHTS

புகை மாசில்லா போகி பண்டிகை கொண்டாட அரியலூர் கலெக்டர் வலியுறுத்தல்
X
பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தைப் பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில், வீட்டில் உள்ள பழைய தேவையற்ற மற்றும் செயற்கை பொருள்களான டயர்கள், பிளாஸ்டிக் இதர பொருள்களை எரிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.

இதுபோன்ற பொருள்களை எரிப்பதால் நச்சுப் புகைகளான கார்பன் மோனாக்ûஸடு, நைட்ரஜன் ஆக்ûஸடுகள், கந்தக டை ஆக்ûஸடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத் துகள்களால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.

மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுவதோடு, பார்வை திறன் குறைபாடும் ஏற்படுகிறது. இதுபோன்ற காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, போகியன்று டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகித் திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும், சுற்றுச்சூழலையும், மக்களின் உடல் நலத்தையும் பாதுகாக்க வேண்டும்/

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 12 Jan 2022 10:57 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...