/* */

அரியலூர் : 1726 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

1726 பயனாளிகளுக்கு ரூ.98 இலட்சத்து 63 ஆயிரத்து 300 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

HIGHLIGHTS

அரியலூர் : 1726 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்
X

அரியலூர் மாவட்டத்தில் 1726 பயனாளிகளுக்கு ரூ.98 இலட்சத்து 63 ஆயிரத்து 300 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.


அரியலூர் மாவட்டத்தில் 1726 பயனாளிகளுக்கு ரூ.98 இலட்சத்து 63 ஆயிரத்து 300 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் பதிவுப் பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் மாதாந்திர ஓய்வுதியம் ஆணைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கும் வகையில் பல்வேறு வகையான வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், கொரோனா பேரிடர் காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான செயல்பாட்டால் கொரோனா தொற்றானது தற்சயம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கிராமங்களிலுள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் உயர் தரத்திலான கல்வியை பெரும் வகையில் பள்ளிக்கூடங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கற்றல், கற்பித்தல் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னின்று களப்பணி ஆற்றி வருகிறார்.

அதன்படி, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியை பின்பற்றி, தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் 18 அமைப்புசாரா நல வாரிய தொழிலாளர்களில் 50721 தொழிலாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கி துவக்கி வைத்துள்;ளார்கள். அதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 965 தொழிலாளர்களுக்கு ரூ.17 இலட்சத்து 79 ஆயிரத்து 300 மதிப்பில் கல்வி உதவித்தொகைகளும், 2 தொழிலாளர்களுக்கு கண்கண்ணாடி, 86 தொழிலாளர்களுக்கு ரூ.86 ஆயிரம் மதிப்பில் ஓய்வுதியமும், 1 தொழிலாளருக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகையும் என மொத்தம் 1054 தொழிலாளர்களுக்கு ரூ.18 இலட்சத்து 83 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் 665 நபர்களுக்கு ரூ.79 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், கணவரால் கைவிடப்பட்டோருக்கான ஓய்வூதியம், முதிர்கன்னி ஓய்வூதியம், உழவர் பாதுகாப்புத்திட்டம் ஆகிய உதவித்தொகைகளும், மேலும் வீடற்ற ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின்கீழ் 7 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களுக்கான ஆணைகளும் வழங்கப்படுகிறது.

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கைகை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார், தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் விமலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Dec 2021 9:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...