/* */

அரியலூர்: வேலைவாய்ப்பு- சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அரியலூரில் வேலைவாய்ப்பு மற்றும் சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர்: வேலைவாய்ப்பு- சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
X

அரியலூர் மாவட்டம் கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்,  நடைபெற்ற சிறப்பு தொழில்நெறி வழிகாட்டல் நிகழ்ச்சியை துவக்கி வைத்து  முதன்மை கல்வி அலுவலர் இ.மான்விழி பேசினார்.


அரியலூர் அடுத்த கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் இ.மான்விழி தொடங்கி வைத்து பேசும்போது

போட்டிகள் நிறைந்த இந்த காலக்கட்டத்தில், படிக்கின்ற போதே மாணவர்கள் தங்களது தனித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேல்படிப்புக்கு செல்லும் போது, வேலைவாய்ப்பு தகுந்த படிப்பினை தேர்வு செய்து அதனை திட்டமிட்டு படிக்க வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் திட்டமிட்டு பயணித்தால் எளிதில் இலக்கை அடையலாம். மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்க்கொள்ள தயராக வேண்டும் என்றார். தொடர்ந்து புத்தகக் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.

முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் கி.சங்கீதா பேசுகையில், மாணவர்கள் தன்னிம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். இஷ்டப்பட்டு படித்தால் வாழ்க்கையில் கஷ்டப்பட தேவையில்லை என்றார்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜி.ரமேஷ் தலைமை வகித்து, உயர்படிப்பில் என்னென்ன படிப்புகளைப் படிக்கலாம் என்று மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் எம்.வினோத்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் பொ.அய்யம்பெருமாள் வரவேற்றார்.முடிவில் தமிழாசிரியர் சி.பாண்டியன் நன்றி தெரிவித்தார்.

Updated On: 29 April 2022 11:32 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...