/* */

அரியலூரில் காலை 5 மணிமுதல் 6 மணிவரை மட்டுமே மொத்த வியாபாரம், சில்லைரை விற்பனை செய்தால் உரிமம் ரத்து

அரியலூரில் காலை 5 மணி முதல் 6 மணிவரை மட்டுமே மொத்த வியாபாரம் செய்ய வேண்டும், அதே இடத்தில் சில்லைரை விற்பனையில் ஈடுபட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.

HIGHLIGHTS

அரியலூரில் காலை 5 மணிமுதல் 6 மணிவரை மட்டுமே மொத்த வியாபாரம், சில்லைரை விற்பனை செய்தால் உரிமம் ரத்து
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு அரசு கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு மாநிலம் முழுமையும் முழுக்கட்டுப்பாட்டினை விதித்திருந்தது. மேற்படி கட்டுப்பாடுகள் எவ்வித தளர்வுகளுமின்றி 24.05.2021 முதல் 31.05.2021 வரை செயல்படுத்தப்படவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நாளை 24.05.2021 காலை 4.00 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது. இம்முழுஊரடங்கின் போது காய்கறி மளிகை உட்பட எவ்வித கடைகளுக்கும் அனுமதியில்லை. (குடிநீர்; /பால் / மருந்தகம் / பத்திரிக்கை விநியோகம் தவிர)

அரியலூர் மாவட்ட பகுதிகளில் காய்கறி / பழங்கள் மொத்த வியாபாரம் தற்போது செல்பட்டு வரும் காந்தி மார்க்கெட்டில் தொடர்ந்து அதிகாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை செயல்படும். மேற்படி பகுதியில் சில்லரை வியாபாரத்திற்கு அனுமதி இல்லை. அதனை மீறி எந்த ஒரு கடையிலும் சில்லரை விற்பனை செய்யப்பட்டால் மொத்த விற்பனை உரிமத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி / பழங்கள் ஆகியவை நகராட்சி / பேரூராட்சி / ஊராட்சி அமைப்புகளின் மூலம் வாகனங்களில் (மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில்) பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த வாகனத்தின் மூலம் காய்கறி / பழங்கள் விற்பனை செய்ய விருப்பம் உள்ளவர்கள் இதற்கான அனுமதி சீட்டினை அரியலூர் நகராட்சி ஆணையர்கள் / பேரூராட்சி செயல் அலுவலர்கள் / ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரை அணுகி பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. அனுமதி சீட்டு இன்றி காய்கறி / பழங்கள் விற்பனை செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு அனுமதி பெற்று வியாபாரம் செய்பவர்கள் காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். ஒரே பகுதியில் தொடர்ந்து அரைமணி நேரத்திற்கு மேல் வியாபாரம் செய்தல் கூடாது.

மேற்படி காய்கறி / பழங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் கூடாது. அவ்வாறு விற்பனை செய்யப்படின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு சம்மந்தப்பட்ட தோட்டக்கலை, வேளாண்மைத்துறை, வேளாண் வணிகத்துறை, துணை இயக்குநர்களால் வாகனங்களுக்கு அனுமதிசீட்டு வழங்கப்படும்.

மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்தல் அனுமதி இல்லை. அதுசமயம் வாடிக்கையாளர்கள் தொலைபேசி வாயிலாக மளிகை பொருட்கள் கோரும் நேர்வில் கடை பணியாளர்கள் மூலம் நேரடியாக வீட்டிற்கு காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை விநியோகம் செய்யலாம்.அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்தல் / பதப்படுத்துதல் நிலையங்கள் அனுமதிக்கப்படுகிறது.

விவசாய விளை பொருட்கள், இடுபொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் எடுத்துச்செல்லும் வாகனங்கள் மற்றும் அரசுத்துறை கட்டுமானம் மற்றும் சாலைப்பணி தொடர்பான வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.

சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை, கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து, வழங்கிட தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்;கப்படுகிறது.

மேலும் பிராணிகளுக்கு உணவு வழங்கிடவும் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்;கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும்.

இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். காய்கறி / பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. வியாபாரிகள் / ஓட்டுநர்கள் / தன்னார்வலர்கள் ஃ/ பொதுமக்கள் என அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திடவும், 6 அடி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினை நல்குமாறு மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.


Updated On: 25 May 2021 1:31 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!