/* */

மின்கம்பங்களில் கேபிள் ஒயர்களை அகற்ற அரியலூர் கலெக்டர் உத்தரவு

மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளில் இடையூறாக கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

HIGHLIGHTS

மின்கம்பங்களில் கேபிள் ஒயர்களை அகற்ற அரியலூர் கலெக்டர் உத்தரவு
X

மின் கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்கள். 

அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளில் இடையூறாக கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின்வாரிய பணியாளர்கள் மின்தடை பராமரிப்பு பணி மேற்கொள்ளும்போது, மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் காலில் சிக்கி விபத்து ஏற்படுகிறது.

விபத்தினை தவிர்க்கும் பொருட்டு மின்பாதைகள் மற்றும் மின்கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இறுதி ஊர்வலங்களில் வீசப்படும் மாலைகளின் அதிர்வினால் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு மின்கம்பிகள் அறுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு மின்மாற்றிகளில் பழுது ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் இறுதி ஊர்வலங்களில் மாலைகளை மின்கம்பிகள் மீது வீசாமல் கவனமுடன் செயல்பட வேண்டும் என, கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 31 March 2022 12:22 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...