/* */

அரியலூரில் வாழ்வாதாரத்தை இழந்துவாடும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி

அரியலூரில் முழு ஊரடங்கால் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மிகவும் சிரமம் அடைந்து வருகிறார். அவர் நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூரில் வாழ்வாதாரத்தை இழந்துவாடும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி
X

அரியலூரில் கண்களை இழந்த மாற்றுத்திறனாளி வாழ்வாதாரம் பாதித்து சிரமம் அடைந்துவருகிறார். அவர் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ரயிலில் ஊதுபத்தி விற்று வாழ்வாதாரத்தை காத்து வந்த அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி இன்னாசிமுத்து, கொரோனா காரணமாக தனது வாழ்வாதாரத்திற்கு உதவிகள் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தினசரி இயக்கப்படும் ரயில்கள் இயக்கப்படவில்லை. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் சிறிய அளிவில் அவ்வப்போது ரயில்கள் இயக்கப்பட்டன.

ஆனால் ஓடும் ரயிலை வைத்துதான் தனது குடும்பத்தினருக்கு தேவையான வாழ்வாதாரத்தை நிறைவேற்றி வந்துள்ளார் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி இன்னாசிமுத்து.



அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த இன்னாசி முத்து 100 சதவீதம் கண்தெரியாத மாற்று திறனாளி. இவரது மனைவி வக்சலா மனநலம் பாதிக்கப்பட்டவர். தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றார். இவர்களுக்கு 5 வயது மகன் அபின்ராஜ் உள்ளார்.

திருச்சியில் கண் தெரியாதவர் என்ற சான்றிதழ் காண்பித்து முன்பணம் இல்லாமல் ஊதுபத்தி வாங்கி அதனை ஓடும்ரயிலில் விற்றுவிட்டு தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதில் கிடைக்கும் வருமானத்தில் ஊதிபத்தி வாங்கிய பணத்தை செலுத்திய பிறகு, நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் வரை லாபம் கிடைத்ததை கொண்டு வாழ்க்கையை நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கொரோனா காலகட்டத்தில் ரயில்கள் இயங்காத நிலையில் ஊதுபத்தி வாங்கி விற்பனை செய்யமுடியாமல் வாழ்க்கையை எப்படி கடத்துவது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.

அரசு தரும் உதவி தொகையை வீட்டு வாடகைக்கு செலுத்தி விடுவதாகவும், குழந்தைக்கு பால் வாங்கி கொடுக்க கூட பணம் இல்லாத நிலையில் சிரமம்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு கண் தெரியாத நிலையிலும் மனைவி துணையுடன் ஊது பத்தி விற்று வாழ்க்கை கடத்தி வந்த இன்னாசிமுத்து தற்போது கொரோனா காலகட்டத்தில் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றார்.

அரசும் தன்னார்வ தொண்டுஉள்ளங்களும் இதுபோன்று உழைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது உதவிகரங்களை நீட்ட வேண்டும் என்பதே இன்னாசிமுத்துவின் கோரிக்கையாகும்.

Updated On: 3 Jun 2021 5:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?