/* */

அரியலூர் : 6 வட்டாரங்களில் 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் காலி

விண்ணப்பங்கள் 30.09.2022 அன்று மாலை 05.00 மணி வரை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

அரியலூர் : 6 வட்டாரங்களில் 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் காலி
X

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ. ரமணசரஸ்வதி

அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் ஆறு வட்டாரங்களில் உள்ள 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்திடும் பொருட்டு தகுதி உள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பு: மேலும், இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரியலூர் மாவட்டத்திற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும், 01.09.2022 அன்றைய தேதியில் 28 வயதிற்குட் பட்டவராக இருத்தல் வேண்டும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும Ms Office-இல் குறைந்தபட்சம் 6 மாத கணினி திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்ற திட்டங்களில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும் மேலும், இப்பணிக்கான மதிப்பூதியம் ரூ.12,000 மட்டும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 30.09.2022 அன்று மாலை 05.00 மணி வரை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர், 621704 என்ற முகவரிக்கு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Sep 2022 1:37 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்