/* */

அரியலூரில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த கலெக்டர் ரத்னா

முன்னாள் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் ரத்னா தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

அரியலூரில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த கலெக்டர் ரத்னா
X

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அரியலூரில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் ரத்னா தொடங்கிவைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 38,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி, அரியலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில், வித்யாமந்திர் பள்ளியில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் த.ரத்னா துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் வனத்துறையின் சார்பில் வித்யா மந்திர் பள்ளியில் 100 மரக்கன்றுகளும், ராம்கோ சிமெண்ட் ஆலையில் 235 மரக்கன்றுகளும், குருவாடி, பொன்னாறு ஓடையில் 665 மரக்கன்றுகள் என 1000 வேம்பு, புங்கமரம், நீர்மதி, நாவல் போன்ற மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

இதன் மூலம் சுற்றுச்சூழல் நீர், நிலம், காற்று ஆகியவற்றை மாசுபடுதலிலிருந்து தவிர்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் வீட்டிற்கு இருமரம் வளர்த்து மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பொதுமக்கள் அனைவரும் பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் ஏழுமலை, மாவட்ட வன அலுவலர் குகநேசன், வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், வனச்சரக அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Updated On: 3 Jun 2021 1:24 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...