/* */

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மீது நடவடிக்கை

அரியலூர் நகரில் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்த 18வயதிற்குட்பட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்

HIGHLIGHTS

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மீது நடவடிக்கை
X

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிகளுக்கு வருவது கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன் அடிப்படையில் அரியலூர் நகரில் பள்ளிகள் அமைந்துள்ள ஐந்து இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து காவல்துறை காவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பள்ளிகளுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 18 வயதுக்கு உட்பட்ட ஐந்து மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 5 மாணவர்களையும் அவர்கள் ஓட்டி வந்த வாகனங்களையும் போக்குவரத்து காவல்துறை அலுவலகத்திற்கு காவலர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும் மாணவர்களின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரச்சொல்லி, விசாரணை நடத்தவும் போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 27 July 2022 7:10 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...