/* */

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்- நீதிபதி ஆய்வு

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்-  நீதிபதி ஆய்வு
X

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகம் கட்ட வழங்கப்பட்டுள்ள இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கேட்டு அரியலூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அரசுகொறடா ராஜேந்திரன் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து சட்டஅமைச்சரிடம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் மூலம் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்துசமய அறநிலையத்துறையிடம் இருந்து இடம் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து அரசு சார்பில் அந்த இடத்திற்கான தொகை வழங்கப்பட்டதன் அடிப்படையில் கடந்த மாதம் நீதிமன்றத்திற்கு இடம் பத்திரபதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்திற்கு வாங்கப்பட்ட இடத்தில் 19 நீதிமன்றங்கள் மற்றும் 19 நீதிமன்ற நீதிபதிகள் தங்கும் குடியிருப்பு வாளகம், பதிவேடுகள் காப்பறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான பரிந்துரையை மாவட்ட முதன்மை நீதிபதி விரைவில் அரசிற்கு சமர்பிக்க உள்ளார்.

இதனையடுத்து தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீதிமன்ற வளாகம், குடியிருப்பு பகுதி உள்ளிட்டவைகள் கட்டுவது மற்றும் சாலைவசதிகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது வழக்கறிஞர் சங்கத்லைவர் மனோகரன், இணை செயலாளர் முத்துக்குமரன், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 10 Feb 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்