/* */

ஐபிஎல்: ராஜஸ்தான் அணியை 7விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

HIGHLIGHTS

ஐபிஎல்: ராஜஸ்தான் அணியை 7விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  கொல்கத்தா அணி வெற்றி
X

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க வாழ்வா சாவா போட்டி. என்ற சவால்களுடன் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் இந்த முறை நிதானமாக ஆட்டத்தை தொடர்ந்தார். மற்றொரு தொடக்க வீரர் படிக்கல் 2 ரன்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததது. அதனால் இந்த ஜோடியால் ரன்சேர்க்க முடிந்தததே தவிர பெரிய ஷாட்களை அடிக்க முடிய வில்லை. அதிக சிக்சர்களை விளைசிய பட்லர் இப்போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நிதானமாக விளையாடிய கேப்டன் சாம்சன் 49 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். கடைசி நேரத்தில் ஹெட்மேயர் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்களை ராஜஸ்தான் அணி சேர்த்தது.

அடுத்து களம் வந்த கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அமர்களமாக இருந்தது தொடக்க வீரர்கள் பிஞ்ச் 4 ரன்களிலும், இந்திரஜித் 15 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். எனினும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் நிதிஸ் ராணா ஜோடி சேர்ந்து நிதானமாக ரன் சேர்த்தனர். இருவரும் மூன்றாவது விக்கெட்க்கு 60 ரன்கள் எடுத்தனர். ஸ்ரேயாஸ் 34 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்துவந்த ரிங்கு சிங் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். இருவரின் நேர்த்தியான ஆட்டத்தால் 19.1 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இறுதியில் 19. 1 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்த கொல்கத்தா தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

Updated On: 3 May 2022 2:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  2. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  4. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  5. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  7. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  10. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...