/* */

இந்தியா ஜிம்பாப்வே 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

HIGHLIGHTS

இந்தியா ஜிம்பாப்வே 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
X

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது .டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே அணி தொடக்க வீரர்களாக களமிறங்கிய கைடானோ டகுட்ஸ்வானாஷே 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இன்னசென்ட் கையா 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். கேப்டன் ரெஜிஸ் சகாப்வா மற்றும் வெஸ்லி மாதேவெரே தலா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சீன் வில்லியம்ஸ் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தார். 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சீன் வில்லியம்ஸ் தீபக் ஹூடா பந்துவீச்சில் ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்கள வீரர்களில் ரியான் 39 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் ஒருநாள் போட்டியை போலவே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சர்த்துல் தாகூர் 3 விக்கெட்களையும், சிராஜ், கிருஷ்ணா, அக்சர், குல்தீப், ஹூடா தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய இந்திய அணி 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷிகர் தவான் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா 25ரன்கள் எடுத்தார். ளும் சஞ்சு சாம்சன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Updated On: 20 Aug 2022 1:33 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...