/* */

காக்கா கரைஞ்சா..வீட்டுக்கு விருந்தாளிங்க வருவாங்களா..? வாங்க பார்ப்போம்..!

unknown facts about black crow-வீட்டுக்கு முன்னாடி காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தாளிகள் வருவார்கள் என்ற நம்பிக்கை இன்றளவும் பலரிடம் இருக்கவே செய்கிறது.

HIGHLIGHTS

காக்கா கரைஞ்சா..வீட்டுக்கு விருந்தாளிங்க வருவாங்களா..?  வாங்க பார்ப்போம்..!
X

unknown facts about black crow-காகம் 

unknown facts about black crow-நம் முன்னோர்கள் செய்த பல நடைமுறை விஷயங்களை தற்போது புதிய தலைமுறையினர் மூடநம்பிக்கை என்று கூறுகிறன்றனர். ஆனால் அது தவறு. நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு காரியங்களிலும் அறிவியல் பின்னணி இருக்கும்.

நல்ல உதாரணம், சாப்பாடு எடுத்துச் செல்லும்போது பேய் பிடித்துக்கொள்ளும்.அதனால் ஆணிஅல்லது கரித்துண்டு எடுத்துப்போ என்பார்கள். பேய் பிடித்துக்கொள்ளும் என்பது மூட நம்பிக்கைதான். ஆனால் அதில் அறிவியல் உண்மை உள்ளது.

அறிவியல் உண்மை :

இரும்புக்கும்,கரிக்கும் சுற்றுப்புறத்தில் உள்ள தூய்மையற்ற காற்றை உறிந்துகொள்ளும் தன்மை உள்ளது. அதனால், அந்த காலத்தில் காட்டுவழியே செல்லும்போது ஆங்காங்கு தூய்மையற்ற சூழலை கடந்து செல்லும்போது தூய்மையற்றவைகளை இரும்பு அல்லது கரித்துண்டு உறிந்து எடுத்துவிடும். ஆகவே உணவு எவ்வித நோய்க்கிருமிகள் தாக்காமல் சுகாதாரமாக இருக்கும். இதை பேய் என்று சொன்னால்தான் நம்மவர்கள் பயந்து அதை பின்பற்றுவார்கள் என்பதால் பேய் காரணம் வலியுறுத்தப்பட்டது.

அதேபோல தான் காகம் வீட்டின் முன் உட்கார்ந்து வீட்டைப்பார்த்து கரைந்தால் விருந்தாளிகள் (உறவினர்கள்) வீட்டுக்கு வருவார்கள் என்பதும். காகம் ஒரு சமூக பறவை. மனித வாழ்க்கையோடு பின்னிபிணைந்து வாழும் பறவை.

காகத்துக்கு உணவு வைத்தல் (படம்)(Quora)

ஒரு அனுபவம் (எல்லோருக்கும் இருக்கலாம்):

நான் சிறுவயதாக இருக்கும்போது, சில நேரங்களில் என் தாயார், இன்னிக்கோ அல்லது நாளைக்கோ தாத்தா அல்லது மாமா நம்ம வீட்டுக்கு வருவாங்க..என்று கூறுவார்கள். அதேபோல என் மாமா அல்லது தாத்தா வந்துவிடுவார்கள். தாத்தா மாமா வீட்டுக்கு வந்தால் நெறைய தீனி கிடைக்கும் ஐயா..ஜாலி..ஜாலி என்று மனம் குதூகலிக்கும். அம்மா சொன்னது நடக்கணுமே என்று மனசுக்குள் கொஞ்சம் பயமும் இருக்கும். ஆனால் அம்மா சொன்னமாதிரியே தாத்தா அல்லது மாமா வந்துவிடுவார்கள் என்பதுதான் ஆச்சர்யத்தின் உச்சம்.

எப்படிம்மா சொல்றீங்க என்று வியந்து கேட்கும்போது, நம்ம வீட்டுக்கு முன்னாடி இருந்து, நம்ம வீட்டைப்பார்த்து ரெண்டு நாளாகவே காக்கா கத்திச்சு.அதை வச்சுதான் சொன்னேன் என்பார்கள். இப்படி பலதடவை நடந்துள்ளது. காகம் நம் முன்னோர்களின் வடிவமாக கருதப்படுவதால் காகம் கரைவதன் மூலம் நம் உறவினர் வருகையை காகம் அறிவிக்கிறது என்ற நம்பிக்கையாக கூட இருக்கலாம்.

அமாவாசைக்கு காகத்திற்கு என் உணவு வைக்கிறோம்?

அமாவாசை அன்று காக்கைக்கு உணவு வைப்பதில் உள்ள அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியிலான காரணங்கள் தரப்பட்டுள்ளன. அமாவாசை விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக முன்னோர்களுக்கு உணவு படையலிட்டு, அவர்கள் சாப்பிடுவதற்கு முன் காகத்திற்கு உணவு வைத்து பின்னர்தான் சாப்பிடுவார்கள்.

காகத்திற்கு உணவு வைப்பது தான் அமாவாசை விரதத்தை நிறைவு செய்யும்.

பலன்கள்

unknown facts about black crow-காகம் நம் முன்னோர்களின் வடிவமாக பார்க்கப்படுகின்றது. அதோடு நம் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தும் போது முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியோர் கூறுகின்றனர். காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைப்பதால், நம் வாழ்வில் தீரா கடன் தொல்லைகள் தீரும். புத்திர சந்தான பாக்கியம் உண்டாகும்.

கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர் நீதி அரசர் சனி பகவான்.

காக்கை சனி பகவானின் வாகனமாகும். காக்கைக்கு உணவளிப்பதால் சனி பகவான் மகிழ்ச்சி கொள்வார். அதோடு சனி பகவானின் சகோதரர் எம தர்ம ராஜன் ஆவார். எம தர்ம ராஜா காக்கை வடிவில் வந்து மனிதர்கள் வாழும் இடங்களில் அவர்களின் நிலையை அறிவாராம்.

காக்கை நம் வீட்டை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு. காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கை கரைவதை கேட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். காக்கைக்கு உணவு அளிப்பதன் மூலம் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் பெறலாம்.

அறிவியல் உண்மை :

காகம் ஊரில் மரங்களை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. வேப்பம் பழம், புளியம் பழம், அத்தி, தக்காளி என பலவற்றை தின்று அதன் கொட்டைகளை பல இடங்களில் பரப்பி பல புதிய மரங்கள் வளர்ப்பதில் காக்கைக்கு முக்கிய பங்கு உண்டு.

அதனால், மரங்கள் வளர்ப்பதற்கு மறைமுகமாக நாம் காகங்களுக்கு உணவளித்து காகங்களை வாழவைக்கிறோம். மேலும் காகங்கள், அழுகிய பொருட்களை சாப்பிட்டு சுற்றுப்புறத்தை தூய்மை செய்கிறது.

Updated On: 17 July 2022 8:03 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  2. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  5. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  6. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  7. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  10. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...