/* */

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் ஆடி அமாவாசை விழா ரத்து

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் ஆடி அமாவாசை விழா ரத்து. தாணிப் பாறையில் பக்தர்களுக்கு மலையேற அனுமதியில்லை. பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

HIGHLIGHTS

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் ஆடி அமாவாசை விழா ரத்து
X

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் ஆடி அமாவாசை விழா ரத்து. தாணிப் பாறையில் பக்தர்களுக்கு மலையேற ஆகஸ்ட் - 6, 7 ,8 , 9 அனுமதியில்லை. பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற இருந்த பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாகவும், வழக்கமான பூஜை மட்டும் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன்,தாணிப் பாறையில் பக்தர்களுக்கு மலையேற ஆகஸ்ட் - 6, 7 ,8 , 9 அனுமதியில்லை எனவும் பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைமேல் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த திருவிழாவானது நடைபெறும்.


சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது சதுரகிரி. மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், பஞ்சபூத லிங்கம் என்பர். இந்த மகாலிங்க மலையை 'சித்தர்கள் வாழும் பூமி' என்று அழைக்கின்றனர்.

ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை வணங்க ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். கல் லாலமரம்' என்ற விருட்சத்தின் அடியில் சந்தன மகாலிங்கத்தை ஸ்தாபித்து அன்னை பார்வதி விரதம் இருந்த நாள் ஆடி அமாவாசை.

இன்றைக்கும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்குவதாக அகஸ்தியர் நாடி சொல்கிறது.


சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது.

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர், சித்தர்கள் நிறைந்த பூமியை தரிசிக்க ஏராளமானோர் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சதுரகிரிக்கு வந்து செல்கின்றனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க பெரிய ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன. உள்ளூரில் உள்ள கிராம கோவில்கள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை நாளில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் யாரும் சதுரகிரிக்கு வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On: 29 July 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?