/* */

சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்.. கேரள சுகாதாரத் துறை வேண்டுகோள்..

சபரிமலை கோயிலுக்கு வருவோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்.. கேரள சுகாதாரத் துறை வேண்டுகோள்..
X

சபரிமலை அய்யப்பன் கோயில்.

மேற்குதொடர்ச்சி மலையில், கேரள மாநிலம், பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று வருவது வழக்கம். மலையாள மாதத்தில் முதல் 5 நாட்கள் இந்தக் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

மேலும், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பக்தர்களின் வசதிக்காக நாள் முழுவதும் நடை திறந்து இருக்கும். தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோயிலில் கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து, 17ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலங்களில் சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

இதற்கிடையே, சபரிமலை பகுதியில் கடந்த வாரம் வரை பலத்த மழை பெய்தது. தற்போது, பருவநிலை மாறி கடும் வெயில் சுட்டெரிக்கிறது. பருவமழை மாற்றம் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோயில் பகுதியில் உள்ளவர்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து போலீஸாருக்கு சின்னம்மை பாதிப்பு அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில், 5 போலீஸாருக்கும் சின்னம்மை பாதிப்பு இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த 12 போலீஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 12 பேரும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், காவலர் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் உள்ளிட்டோர் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என கேரள சுகாதாரத் துறையில் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக மற்றவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், நடப்பு ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்ததால் மகிழ்ச்சியாக கோயிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள்.

கேரள சுகாதாரத் துறை தற்போது அறிவித்துள்ள கட்டாய முகக்கவசம் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், வேறு எந்த கட்டுப்பாடுகளையும் விதித்துவிடக் கூடாது என்ற எதிர்பார்ப்பில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் உள்ளனர்.

Updated On: 28 Nov 2022 4:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  4. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  5. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  6. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  9. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  10. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...