/* */

பெருமாளே தர்ப்பணம் செய்யும் நென்மேலி திருத்தலம்

காஞ்சிபுரம் அருகே உள்ள நென்மேலி திருத்தலம் இறைவனே கருணையோடு இறங்கி வந்து மனிதர்களுக்காக திதி கொடுக்கும் ஒரே அற்புத தலம்

HIGHLIGHTS

பெருமாளே தர்ப்பணம் செய்யும் நென்மேலி திருத்தலம்
X

இறைவனே திதி கொடுக்கும் நென்மேலி திருத்தலம் 

  • பித்ருக் கடனைத் தீர்க்க வாரிசு இல்லை. ஆண் வாரிசு இல்லை. மகள்தான் உண்டு.
  • தானே தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். இவருக்கு கதி மோட்சம் உண்டா?
  • விபத்திலோ வேறு காரணத்தாலோ துர்மரணம் நிகழ்ந்துவிட்டவருக்கு, மோட்சகதி உண்டா?
  • இதுவரை, பித்ருக்களுக்கு தர்ப்பணமோ திதியோ கொடுக்கவே இல்லை என்பவருக்கு இனியேனும் மன்னிப்பு உண்டா? பரிகாரம் இருக்கிறதா? பித்ரு சாபமெல்லாம் நீங்கிவிடுமா?

இவை அனைத்துக்கும் ஒரே பதில், நென்மேலி ஸ்ராத்த ஸம்ரக்ஷணப் பெருமாள். நம் பித்ருக்களுக்கு அவரே திதி கொடுத்து, இதுவரை நாம் விட்டதையெல்லாம் ஈடுகட்டித் தருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில். செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 800 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம். மூலவர் சுயம்புத் திருமேனி என்கிறது ஸ்தல் வரலாறு. இப்போதைய நென்மேலி கிராமம், அந்தக் காலத்தில் புண்டரீக நல்லூர் என அழைக்கப்பட்டது. அதாவது பிண்டம் வைத்த நல்லூர் எனப்பட்டது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

700 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு நவாபுகளின் ஆட்சி நடைபெற்றது. இந்தப் பகுதியை யக்ஞநாராயண சர்மா என்பவர் திவானாகப் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சரஸ வாணி. இருவரும் பெருமாளின் மீது மாறா பக்தி கொண்டிருந்தார்கள்.

கையில் வசூலித்த பணத்தையெல்லாம் இந்த நென்மேலி பெருமாளுக்கே செலவு செய்தார்கள். இதனால், ஆற்காடு நவாப்பிடம் வரிப்பணத்தையெல்லாம் செலுத்தமுடியாத நிலை. இதை அறிந்த நவாப், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடிவுசெய்தார். அதை அறிந்த இந்தத் தம்பதி, திருவிடந்தை குளத்தில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்டனர். அப்போது உயிர் பிரியும் தருணத்தில், ‘எங்களுக்கு வாரிசு இல்லையே. எங்களின் ஈமக்காரியங்களை செய்ய எவரும் இல்லையே’ என வருந்தினார். இருவரும் இறந்தார்கள். பின்னர், அவர்கள் இருவருக்கும் பெருமாளே வந்து சிராத்தம் உள்ளிட்ட ஈமக்காரியங்களைச் செய்தார் என்கிறது தல வரலாறு.

அன்றில் இருந்து இன்று வரை, பிள்ளை இல்லாதவர்களுக்கோ, அகால மரணம் அடைந்தவர்களுக்கோ, ஏதோவொரு சூழலால், சிராத்தம் தடைப்பட்டு போயிருந்தவர்களுக்கோ, இந்தக் கோயிலில் சிராத்தம் செய்யப்படுகிறது. அதாவது பெருமாளே சிராத்தம் செய்வதாக ஐதீகம். காசி மற்றும் கயாவுக்கு நிகரான க்ஷேத்திரம் என்றும் சௌலப்ய கயா என்றும் அறியப்படுகிறது.

தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என எண்ணுபவர்களுக்கு இந்த கோயில் சரியான தீர்வு. குழந்தைகளை இழந்த பெற்றோர், தனக்கு பின் வாரிசுகள் இல்லாத தம்பதிகள், இந்த தலத்தில் வந்து திதி கொடுப்பது சிறப்பு.

சந்ததிகள் இல்லாதவருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று பெருமாள் ஸ்ராத்தம் செய்து வைப்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். ஸ்வாமிக்கு வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்ந்த துவையலும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதை மட்டும் ஏற்றுக் கொண்டு, பித்ருக்களை திருப்தி செய்கிறார் பெருமாள்!

தினமும் நடைபெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது எந்த நாளில் முடியுமோ அன்று கலந்து கொள்வது கயாவில் சென்று ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும்.

ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், பித்ரு சாபம் உள்ளவர்கள், வீட்டில் அகால மரணம் அடைந்தவர்கள், துர்மரணம் தோஷம் உள்ளவர்களின் குடும்பத்தார், இங்கு வந்து சிராத்தம் செய்வது ரொம்பவே நல்லது.

இங்கு, தினமும் சிராத்த காரியங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அமாவாசை, பஞ்சமி, ஏகாதசி முதலான புண்ணிய திதிகளில் இங்கு வந்து சிராத்தம் செய்வது கூடுதல் விசேஷம் என்கிறார்கள்.

நமக்காக, நம் குடும்பத்துக்காக, நம் பரம்பரை நன்மைக்காக, நம் முன்னோர்களுக்காக சிராத்தம் செய்து வைக்கும் சிராத்த சம்ரக்ஷண பெருமாளை தரிசித்துப் பிரார்த்திப்போம். பித்ரு தோஷம் தொலைந்து, அவர்களின் ஆசியுடன் சந்ததி சிறக்க வாழ்வோம்.

Updated On: 17 Feb 2024 4:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!