/* */

இடதுகண் துடிக்குதா...? அதுக்கு என்ன பலன்..? வாங்க பார்ப்போம்..!

Left Eye Blinking in Tamil-நம்பிக்கைதாங்க வாழ்க்கை என்போம். இப்போ இடது கண் துடித்தால் என்ன ஆகுங்க..? வாங்க பார்க்கலாம்.

HIGHLIGHTS

இடதுகண் துடிக்குதா...? அதுக்கு என்ன பலன்..? வாங்க பார்ப்போம்..!
X

left eye blinking for female astrology meaning in tamil-இடது கண் துடித்தல். (Madhiri

Left Eye Blinking in Tamil-பொதுவாகவே நம்பிக்கை என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கிய கருவியாக உள்ளது. அந்த நம்பிக்கையை சிலர் மூட நம்பிக்கை என்று சொன்னாலும் கூட காலம் காலமாக அந்த நம்பிக்கை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அப்படி பல விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக பூனை குறுக்கே போனால் நல்லதல்ல. இடது கண் துடித்தால் நல்லதல்ல போன்ற விஷயங்கள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது. அந்த பார்க்கப்போவது இடது கண் துடித்தால் என்னவாகும் என்பதுதான்.

இதற்கு புராணங்களில் இருந்து சில சான்றுகளையும் பார்ப்போம். இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு நல்லதல்ல என்பதை ராமாயணம் தெளிவாக சொல்கிறது.

ராமனும்,சுக்ரீவனும் கை கோர்த்திருந்த காட்சி.

அதற்கு இந்த கதை..

ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். "ராமா, நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், இன்பமோ,துன்பமோ அது நம் இரண்டு பேருக்கும் உரியது," என்றான் சுக்ரீவன்.

ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது.

வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 11 March 2024 5:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?