/* */

Pilliyarpatti vinayagar Temple- பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா கொடியேற்றம்

Pilliyarpatti vinayagar Temple- பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

HIGHLIGHTS

Pilliyarpatti vinayagar Temple- பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா கொடியேற்றம்
X

Pilliyarpatti vinayagar Temple- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது.

Pilliyarpatti vinayagar Temple,Chaturthi Festival- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும்.

இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கொடி கோவிலை சுற்றி வந்தது. 11 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


முதல் நாள் திருவிழாவான நேற்று கற்பகவிநாயகர் மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். 2-ம் நாள் திருவிழாவான இன்று(திங்கட்கிழமை) இரவு சிம்ம வாகனத்திலும், 12-ம் தேதி பூத வாகனத்திலும், 13-ம் தேதி கமல வாகனத்திலும், 14-ம் தேதி இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.வருகிற 15-ம் தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 16-ம் தேதி மயில் வாகனத்திலும், 17-ம் தேதி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதேபோல் 18-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாறு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் படையல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. இத்துடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

விழாவில் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை , காரைக்குடி சாமிநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Updated On: 11 Sep 2023 5:23 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்