/* */

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்- முதல்வர் ஸ்டாலின் உறுதி
X
முதல்வர் ஸ்டாலின்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை அரசிடம் அளித்து இருந்தது. இந்த இறுதி அறிக்கை சட்டமன்றத்தில் செவ்வாக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த சம்பவத்தில் போலீசார் தங்கள் அதிகார வரம்பையும் மீறி செயல்பட்டதாகவும் மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் 3 வருவாய்த்துறை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கை மீது விவாதம் தமிழக சட்டசபையில் நேற்று நடந்தது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். அப்போது பேசியவர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் விசாரித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறினார்கள்.

பின்னர் இதற்கு பதில் அளித்து சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது:-

இந்தப் பிரச்சனையை அப்போதைய அ.தி.மு.க. அரசு சரியாக கையாளவில்லை. துப்பாக்கிச்சூடு திட்ட மிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து வெளியிட்டுள்ளது. 11 ஆண்கள் இரண்டு பெண்கள் என 13 பேர் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர்.

அன்றைய முதல்-அமைச்சர் பழனிசாமியின் எதேச்சதிகாரத்திற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாய் உள்ளது. இதை அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே உறுதியாக சொல்லி விட்டது. ஒருவேளை இந்த ஆணையத்தை நாங்கள் அமைத்திருந்தால், இதில் அரசியல் உள்ளது என்று கூட சொல்வார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவதைப் பற்றி இங்கு பேசியவர்கள் அழுத்தத்தோடு சொன்னீர்கள். இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு, ஏற்கனவே வழங்கிய நிதியோடு, மேலும், கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்களை, அந்தப் பரிந்துரைகளை அரசு கவனமாக பரிசீலனை செய்தது, இன்னும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். இச்சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள்மீது துறைரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான பணிகளைத் தொடங்கி விட்டோம். அதன் விவரத்தை இப்போது தெரிவிக்க விரும்புகிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் மீது, துறைரீதியான நடவடிக்கை பொதுத் துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினை சேர்ந்த மூன்று வருவாய் துறை அதிகாரிகள்மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு & மேல்முறையீடு) விதிகளின் பிரிவு 17(B)–ன்கீழ் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. உள்துறை மூலமாக, அப்போதைய தென் மண்டல காவல் துறைத் தலைவர், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணைக் காண்காணிப்பாளர், மூன்று ஆய்வாளர்கள், ஒரு சார்-ஆய்வாளர் மற்றும் 7 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் நேரடியாக ஈடுபட்ட ஒரு ஆய்வாளர் உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்திலும் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்படும். நிர்வாகத்தை நடத்தக்கூடிய அதிகாரிகளாக இருந்தாலும், சட்டம்-ஒழுங்கைக் காக்கக்கூடிய காவலர்களாக இருந்தாலும், மனிதாபிமானம் கொண்டவர்களாக, மக்கள் சேவகர்களாக மட்டுமே நடந்து கொள்ள வேண்டுமே தவிர, வேறு மாதிரியாக நடந்து கொள்வது மனிதத் தன்மைக்கே விரோதமானது என்பதை உணர வேண்டும். அதிகாரமும், சட்டமும் மக்களைக் காக்கவே என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்த சம்பவத்தில் யார், யார் குற்றவாளிகளோ, அவர்கள் எல்லோரும் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Updated On: 19 Oct 2022 12:27 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  2. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  3. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  4. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  7. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  8. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  9. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  10. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை