/* */

ரஷ்ய புரட்சியாளர் லெனின் என்ன சொன்னார்..? படிச்சு தெரிஞ்சுக்கங்க..!

Lenin Quotes in Tamil-லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர். அவருடைய கொள்கைகள், மார்க்சின் கொள்கைகளுக்கு முரண்படவில்லை. எனினும், முதன்மைகளை அளிப்பதில் அவர் மார்க்சிடமிருந்து பெரிதும் மாறுபட்டார்.

HIGHLIGHTS

Lenin Quotes in Tamil
X

Lenin Quotes in Tamil




Lenin Quotes in Tamil

விளாதிமிர் இலீச் லெனின், ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும் ஆவார். பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவனரும் ஆவார். ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த முக்கிய அரசியல் தலைவர் லெனின் ஆவார். லெனின் ஒரு செயல்வீரராக விளங்கினார். ரஷியாவில் பொதுவுடமை அரசை நிறுவுவதற்குக் கண்ணுங் கருத்துமாகப் பாடுபட்டார். அவர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறை அரசியல் செயற்படுத்தினார். 1917 நவம்பர் முதற்கொண்டு உலகெங்கும் பொதுவுடமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது.

நாட்டுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முறையில் புரட்சி இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கை உடையவர். அவர் புரட்சி நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். வன்முறை இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தி வந்தார். "வர்க்கப் போராட்டத்தில ஒரு சிக்கல் கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறே இல்லை!" என்று அவர் வலியுறுத்தினார்.

அவரது மேற்கோள்களை பார்ப்போம் வாருங்கள்.

  • எல்லோரிடமும் அன்பாக இரு. சிலரை மட்டும் நம்பு. அனைவரையும் பின்பற்று. ஆனால், அவற்றிலிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்.
  • எல்லோரையும் திருப்தி பட வைப்பவனால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.
  • நூலகம் இல்லாத ஊரை நான் ஒரு ஊராகவே மதிப்பதே இல்லை.
  • உன் வாழ்க்கையில் உன் கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட ஒரு லட்ச்சியத்திற்காக ரத்தம் சிந்துபவனை இந்த உலகம் போற்றும்.
  • வீட்டு வேலைகளில் இருந்து எப்பொழுது பெண்கள் விடுதலை அடைகின்றனரோ அதுவரை மனித குலத்துக்கும் விடுதலை கிடையாது.
  • தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும் தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த குணங்களாக அறியப்படுகின்றன.


  • தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
  • காண்பது அனைத்தையும் சந்தேகக் கண் கொண்டு பார்.
  • அச்சத்தை விட ஆபத்தை ஒருமுறையாவது சந்திப்பது மேலானது.
  • புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே.
  • பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீட்டுக்கு சமமாகும்.
  • மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லும்.
  • உன்னதமான அனைத்து வேலைகளும் முதல் முதலில் முடியாது என்று தான் அனைவருக்கும் தோன்றும்.
  • அனைவரையும் நேசி..சிலரை மட்டும் நம்பு..ஒருவரைப் பின்பற்று.ஆனால், ஒவ்வொருவரிடமும் இருந்து கற்றுக்கொள்..!
  • நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட..இலட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து.. உலகம்

உன்னைப் போற்றும்..!

  • அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய் உண்மை ஆகி விடும்..!
  • போராட்டம் இல்லையேல் வாழ்க்கை இல்லை..!
  • நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே.. நீ விரும்புவதை உலகமே எதிர்த்து நின்றாலும்

செய்து முடி..!


  • உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை மேல் எழும்பிவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான

ஆயுதங்களே மதமும் கடவுளும்..!

  • மக்கள் புரட்சி எப்படி உருவாகும்..? மக்கள் இனி வாழ வழியில்லை என்று எண்ணும் போது

புரட்சி வெடிக்கும்..!

  • பிறரிடம் நீ எந்த குணத்தை வெறுக்கிறாயோ.. அந்தக்குணத்தை உன்னிடம் வைத்துக் கொள்ளாதே..!
  • நீ ஏழையாக பிறக்க நீ காரணமில்லை.. நீ ஏழையாக இருக்க வேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை..!
  • குழந்தைகளிடம் எதையும் திணிக்காதீர்கள்.. அவர்களின் அறிவை தூண்டி பிரகாசிக்க வையுங்கள்..!
  • சுதந்திரம் விலை மதிப்பற்றது..ஆனால் அதை கவனமாக பயன்படுத்த வேண்டும்..!
  • நாம் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயல்பட்டால் தான் நமது போராட்டத்தில் நம்மால்

வெல்ல முடியும்..!

  • மத ஒழுக்கநெறி என்ற சொற்தொடர் தான் மக்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டு ஏமாளிகளாக வைத்திருக்கிறது..!
  • புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் சாத்தியமல்ல..!
  • கற்றறிதல்.. ஒழுங்கமைத்தல்..ஒன்றுபடச் செய்தல்..போராடுதல் ஆகியவற்றின் மூலம் இளைஞர்கள் தம்மையும் பயிற்றுவித்துக் கொண்டு..இளைஞர் சமூகத்திற்கும் பயிற்றுவிக்க வேண்டும்..!
  • புரட்சிக்கான சூழல் அமையாமல் புரட்சி சாத்தியமில்லை.. மேலும் எல்லா புரட்சிகர சூழலும் புரட்சி ஏற்படுத்துவதில்லை..!
  • முடிந்து போனவை என்று உதாசீனம் செய்யாதீர்கள்..நினைத்து பார்க்கவோ நெகிழ்ந்து போகவோ இறந்த காலத்தில் தான் எல்லாம் இருக்கிறது..!
  • ஒரு தலைமுறை இளைஞர்களை மட்டும் எனக்குக் கொடுங்கள், நான் இந்த முழு உலகையும் மாற்றுவேன்.
  • எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, அதை நாமே வழிநடத்துவதுதான்.
  • நாத்திகம் என்பது பொதுவுடைமையின் இயல்பான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும்.
  • உங்கள் இதயம் நெருப்பிலும், உங்கள் மூளை பனியிலும் இருக்க வேண்டும்.
  • கற்றலானது ஒருபோதும் பிழைகள் மற்றும் தோல்வி இல்லாமல் செய்யப்படுவதில்லை.
  • ஜனநாயகம் என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினருக்கு அடிபணிய வைப்பதை அங்கீகரிக்கும் ஒரு அரசாகும். அதாவது ஒரு வர்க்கத்தால் மற்றொன்றுக்கு எதிராக வன்முறையை முறையாகப் பயன்படுத்துவதற்கான ஒரு அமைப்பு.
  • ஒரு நாடு மற்றைய நாடுகளை ஒடுக்கினால் அதனால் சுதந்திரமாக இருக்க முடியுமா? அதனால் முடியாது.
  • தவறான சொல்லாடல் மற்றும் தவறான பெருமிதம் தார்மீக அழிவை உச்சரிக்கிறது. மற்றும் தவறாமல் அரசியல் அழிவுக்கும் வழிவகுக்கிறது.
  • சுதந்திரம் விலைமதிப்பற்றது என்பது உண்மைதான். மிகவும் விலைமதிப்பற்ற அது கவனமாக பங்கிடப்பட வேண்டும்.
  • எந்த அளவு அரசியல் சுதந்திரமும் பசியுள்ள மக்களைத் திருப்திப்படுத்தாது.
  • ஒருவரால் சமூகத்தில் வாழவும் முடியாது, சமூகத்திலிருந்து விடுபடவும் முடியாது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 March 2024 9:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  3. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  4. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  5. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  6. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  7. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  9. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  10. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...