/* */

தமிழக பாஜகவின் வெற்றி தொட்டுவிடும் தூரத்தில்..!

பாஜக வெற்றி, பெரிய வெற்றியாக மாற என்ன செய்ய வேண்டும், என்பது குறித்து பாஜகவின் இணையதள பிரிவு திட்டமிடுதலை இங்கு அறியலாம் வாங்க.

HIGHLIGHTS

தமிழக பாஜகவின் வெற்றி தொட்டுவிடும் தூரத்தில்..!
X

பாஜ இணையதள பிரிவு (கோப்பு படம்)

பா.ஜ.க.,வின் ஐ.டி., விங்க் பதிவாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி திட்டமிட்டதை நமது வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

பாஜகவில் உங்க பக்கத்து வீட்டுக்காரர் என் ஃபிரண்டுதான் என்று கொலம்ப்ஸ் ஒஹாயோவில் இருந்து நண்பர் சொன்ன பின்புதான் பக்கத்து வீட்டுக்காரரும் பாஜக என்று தெரிந்தது. இது விளையாட்டாகச் சொல்லவில்லை. இன்றுவரை இதுதான் தமிழக பாஜகவின் எதார்த்த நிலை. உங்கள் பக்கத்து தெருவில், ஊரில், தொகுதியில் இருக்கும் பாஜக வேட்பாளர் யார் என்று கேட்டால் தெரியாது.

அதுபோல, உங்கள் பகுதியில், கிராமத்தில் இருக்கும் ஒரு பாஜக நிர்வாகிக்கு யார்? ஆதரவாளர்கள் என்று தெரியாது. அந்த ஊரில் இருப்பது யாரென்றே தெரியாமல், எந்த கட்சி ஆதரவாளர் என்று தெரியாமல் பூத் கமிட்டி மெம்பர் வாக்கு சாவடியில் அமர்ந்து என்ன செய்வார்?

சரி, தேர்தல் நெருங்கி விட்டது. தனித்தனி தீவுகளாக இருப்பவர்களை, மக்களை இணைக்க வழி உண்டா? உண்டு. ஒவ்வொரு பாஜக நிர்வாகி, தொண்டர்கள் இணைந்து செய்ய வேண்டிய செயல்கள் என்ன என்பதைப்பார்ப்போம். உங்கள் ஊரில் 100 வீடுகள் இருப்பதாக கொள்வோம்.

பாஜக நிர்வாகி ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட சில கேள்வித்தாள்களுடன் ஒவ்வொரு மக்களையும் சென்று கீழ்கண்ட கேள்விகள் ( சரியான கேள்விகளை கட்சி நிர்வாகிகள் கொடுக்கட்டும், இப்போதைக்கு இது சேம்பிள்) உடன் ஒரு சர்வே எடுக்கட்டும்.

மத்திய அரசு கொடுக்கும் உதவித்தொகையான விவசாயிகளுக்கு ரூ. 6000, நூறு நாள் வேலை திட்டம், மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் போன்ற வற்றை வரிசைபடுத்தி இது அவர்களுக்கு கிடைக்கிறதா? கிடைத்தால் அது மோடி அரசாங்கம் கொடுத்த திட்டம். அது உங்களுக்கு ஒழுங்காக வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கிடைக்கவில்லை என்றால் அவர்கள் தகுதியான திட்டங்கள் மூலம் உங்களுக்கு பெற்று தர உதவுகிறோம் என்று உணமையில் அதற்கான தகுதிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட நோட்டீஸ் கொடுங்கள். அவர்கள் பெயர் தேவையை குறிப்பெடுத்து கொள்ளவும்.

மத்திய அரசின் வீடு கட்டித்தரும் திட்டம், டாய்லெட் வசதிக்கான திட்டம், முத்ரா லோன் போன்றவற்றை அறிமுகப்படுத்தி, அதற்கான உதவிகள் பெறுகிறார்களா? இல்லாவிட்டால் அதை செய்ய என்ன செய்ய வேண்டும், அவர்களுக்கு தேவை இருந்தால் அவர்கள் தேவை விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

ரேஷன் கடைகளில் மத்திய அரசாங்கம் கொடுக்கும் அரிசி முதல் தடுப்பூசி வரை திட்டங்களை தெரிவித்து, அதில் மத்திய அரசாங்கம் எவ்வளவு கொடுக்கிறது, மாநில அரச்சங்கம் கொடுப்பதென்ன என்பதை விவரித்து, அது சரியாக கிடைக்கிறதா? கிடைக்காவிட்டால் அதுபற்றிய விபரங்களை சேகரிக்க வேண்டும்.

குடிநீர் திட்டங்கள் (ஜல் ஜீவன்) மூலம் அவர்களுக்கு குடி தண்ணீர் கிடைக்கிறதா, அதனை மூலம் எவ்வளவு நேரம் சேமிக்க முடிகிறது என்பதை சேகரிக்கவும். கிடைக்காதவர்கள் ஊர், இடம் போன்ற அவசியமான விபரங்களை வாங்கி, பட்டியலையும் சேகரிக்கவும்.

சிலிண்டர் விபரங்கள், மானியம் மூலம் பெறுகிறவர்களா? இல்லை தற்போதைய நிலையில் அவர்களுக்கு விலை உயர்வு மூலம் உள்ள பிரச்சினைகளை சேகரிக்கவும். அதில் மத்திய அரசு எவ்வளவு வரி போடுகிறது, எவ்வளவு குறைத்துள்ளது, மாநில அரசு கொடுத்த வாக்குறுதி என்ன, அதை செய்யவில்லை என்பது போன்ற விபரங்களை சொல்லி, அவர்கள் தேவை பற்றிய விபரங்க்ளை சேகரித்து, அவர்களுக்கு மானிய சிலிண்டர் கிடைக்க வாய்ப்பு இருந்தால், அதற்கான விபதங்களை சேகரிக்கவும்.

பெட்ரோல் டீசல் விலை பற்றிய அவர்கள் கருத்து கேட்டு, அதில் வரும் வருவாய் மூலம், மத்திய அரசு எவ்வளவு ரோடுகளை போட்டிருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். விபரங்களை நோட்டீஸ் கொடுத்து விவரிக்கவும். அவர்கள் பிரச்சினைகளாக சொல்லும் விஷயங்களை சேகரிக்கவும்.

மாநில அரசால் ஏற்படும் பிரச்சினைகள், தேவைகள் சேகரிக்கவும். அவர்கள் மானில் அரசு பற்றிய மதிப்பீடு கேட்கவும். இதுபோன்ற பல விஷயங்களை ஒவ்வொரு வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டும். அதை நிர்வாகிகள் மட்டும்செய்ய முடியாது. அதனால் ஆதரவாளர்களிடம் உதவி பெற்று, சிலரிடம் நிர்வாகிகள் செய்யும் விஷயத்தை எளிதாக செய்து முடிக்க வேண்டும்.

இதில் முக்கியமாக இருக்க வேண்டியது பூத் கமிட்டி மெம்பர்கள். அதன் மூலம் அவர்களுக்கு வாக்காளர்கள் அறிமுகம் கிடைக்கும். அடுத்ததாக அவர்கள் சென்ற பாராளுமன்ற, சட்ட்மன்றத்திற்கு யாருக்கு வாக்களித்தார்கள், இந்த முறை யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்று கேட்டு, அதை சேகரிக்க வேண்டும்.

இது பாராளுமன்றத்திற்கான தேர்தல், மோடி தான் மீண்டும் பிரதமர் ஆகப்போகிறார். இப்போது உள்ள எதிர்கட்சிகளால் எந்த பயனும் இல்லை, அவர்களை மீண்டும் தேர்ந்தெடுத்தால் மீண்டும் எதுவும் நடக்காது என்று விவரித்து, பாஜகவிற்கு வாக்களிக்கு சொல்லலாம்.

அவர்கள் பாஜகவிற்கு வாக்களித்தால், மோடி அரசாங்கம் அடுத்து ஐந்து ஆண்டுகளில் என்ன செய்யும், லோக்கல் நிர்வாகிகள் எப்படி உதவுவார்கள் என்பதை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். இந்த விபரங்களை கிராமம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, சட்டசபை பகுதிகள், பாராளுமன்ற பகுதிகள், ஏன் முழுமையாக மாநில அளவில் சேகரித்து, அந்த விபரங்கள் அடுத்த குறிப்பிட்ட நேரத்தில் மேலிடத்திற்கு கொடுக்க வேண்டும்.

அதை மொபைல் அப்ளிகேஷன் மூலம் கொடுத்தால், உடனுக்குடன் அதை பார்க்கமுடியும், அதை எங்கே சுணக்கமாக செய்கிறார்களோ அங்கே துரிதப்படுத்தி, நன்கு செய்கிறவர்களை பாரட்டி ஊக்கப்படுத்த வேண்டும். அதன் மூலம் எந்த நிர்வாகிகள் ஒழுங்காக பணி செய்கிறார்கள், யார் செய்வதில்லை என்பது தெரிந்துவிடும். இதுபோன்ற கணக்குகள் கேட்டால், அவர்கள் இஷ்டத்திற்கு ஒரு ரிப்போர்ட் கொடுப்பார்கள் என்பது நமக்கு தெரியாதா என்ன?

அதற்காக, அந்த திட்டங்களின் பயனாளிகள் யார், எந்த வார்டு ஒன்றியம், சட்டசபை, பாராளுமன்ற தொகுதி என்ற விபரங்களை மத்திய அரசாங்கத்திடம் இருந்து இன்னொரு டீம் எடுத்து, அதை வார்டு அளவில் கொடுத்த விபரங்களை சரிபார்த்து (Cross Check) செய்து, கொடுத்த ரிப்போர்ட் சரியா, தவறா என்று உறுதிபடுத்தியும், யார் சரியாக செய்திருக்கிறார், எவ்வளவு சரி, யார் மோசமாக செய்திருக்ககிறார்கள் என்பதை Progress Report ஆக ஒவ்வொரு நிலையிலும் கொடுத்து, தவறானவர்களை துரிதபடுத்தி, சரியானவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

மேலும் அவர்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்பதை ஒபீனியன் போலாக, சேகரித்து, அதன் மூலம் எங்கே என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த சில நாட்களில் செய்யமுடியும். இன்னும் சில தினங்கள்தான் இருக்கிறதே செய்ய முடியுமா?

மொபைல் ஏப் மூலம் இதை எளிதாக செய்ய முடியும். மேலும் இந்த வாக்குகளை சேகரித்தவர் யார் என்பது முதல் விபரங்களை பெற முடியும். இது செய்தால், இதுவே பிரசாரமாகிவிடும், தனியாக பிரசாரம் செய்ய தேவையில்லை. இதற்கான Mobil App ஒரு சில நாட்களில் செய்து விடலாம். Google Survey போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இதை இப்படியே செய்ய வேண்டியதில்லை. Expert Team Suggestion க்கு ஏற்ப, கட்சி தலைமை எதிர்பார்க்கும் டீடெய்ல்ஸுக்கு ஏற்ப அதை இப்போதும், வருங்காலத்திலும், குறிப்பாக அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இதை பயன்படுத்தலாம். IT Wing என்பது வெறும் சோஷியல் மீடியாவில் வேலை பார்ப்பது மட்டுமல்ல, இதுபோன்ற வேலைகளை செய்தால் அதுதான் மோடி எதிர்பார்க்கும் டிஜிட்டல் உலகம்.. அதை தமிழகத்தை விட வேறெங்கு செய்ய முடியும்?

இதை இப்போது செய்து முடித்தால், வருங்கால தேர்தலில், பாஜக கட்சியை டிஜிட்டல் கட்சி ஆக்கிவிடலாம். அது மட்டுமல்ல மக்களிடம் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு எங்கே என்ன செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிடலாம்.

Updated On: 1 April 2024 5:05 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  2. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  3. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  4. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  5. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  6. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  7. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  8. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  9. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  10. தமிழ்நாடு
    கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையுடன் இணைப்பதற்கு ஓபிஎஸ்...