/* */

தொண்டருக்கு பணம் வழங்கிய விவகாரம்: ஓ. பன்னீர் செல்வத்திற்கு புதிய சிக்கல்

தொண்டருக்கு பணம் வழங்கிய விவகாரம் தொடர்பாக ஓ. பன்னீர் செல்வத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தொண்டருக்கு பணம் வழங்கிய விவகாரம்: ஓ. பன்னீர் செல்வத்திற்கு புதிய சிக்கல்
X

தொண்டருக்கு பணம் வழங்குவது போன்ற வீடியோ ஓ பன்னீர்செல்வத்திற்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் தொண்டருக்கு ரூ.500 வழங்கிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதோடு தேர்தல் விதிமீறல் செய்துள்ளதாக பரப்பான புகார் கிளம்பி உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான மனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இன்றுடன் மனுத்தாக்கல் முடிவடைந்துள்ளது.

தற்போது எம்எல்ஏவாக உள்ள முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனி அணியாக செயல்பட்டு வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் அவர் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஓ பன்னீர் செல்வம் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் அணிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுத்தாக்கலை அவர் செய்துள்ளார். சுயேச்சையாக களமிறங்கி உள்ள ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தேர்தல் பிரசாரத்தின்போது ஓ பன்னீர் செல்வத்தை தொண்டர் ஒருவர் தனது குழந்தையுடன் சந்திக்கிறார். அந்த தொண்டர் தனது குழந்தையை ஓ பன்னீர் செல்வத்திடம் வழங்குகிறார். ஓ பன்னீர் செல்வம் குழந்தையை சிறிது நேரம் தனது மடியில் வைத்துள்ளார். இந்த வேளையில் தொண்டர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது குழந்தையை சேர்த்து போட்டோ எடுத்து கொள்கிறார்.

அதன்பிறகு குழந்தையை தொண்டரிடம் வழங்கிய ஓ பன்னீர் செல்வம் தனது சட்டைப்பையில் இருந்த ரூ.500யை எடுத்து தொண்டரிடம் வழங்குகிறார். இந்த வீடியோ இப்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பொதுவாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நடத்தை விதிகள் அமலில் இருக்கும். இந்த வேளையில் வேட்பாளர்கள் யாருக்கும் பணம் வழங்கக்கூடாது. மீறி வழங்கினால் அது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இத்தகைய சூழலில் தான் ஓ பன்னீர் செல்வம் தேர்தல் நடத்தை விதியை மீறிவிட்டதாக புகார்கள் கிளம்பி உள்ளன.

இது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ பன்னீர் செல்வத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில் அவரது பெயரில் மேலும் 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் இந்த தொகுதியில் 6 ஓ பன்னீர் செல்வங்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சுயேச்சை சின்னம் தான் வழங்கப்படும். இந்த சமயத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் மற்ற ஓ பன்னீர் செல்வங்களுக்கு கிடைக்கலாம். இது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் தற்போது அவர் ரூ.500 வழங்கிய வீடியோ வெளியாகி மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 March 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு