/* */

எடப்பாடியை கூட விடக்கூடாது! ஆளுநரை வைத்து அதிமுகவிற்கு செக்..!

ஆளுநருக்கு எதிரான வழக்கு மூலம் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அதிமுகவினருக்கு செக் வைக்க திமுக தரப்பும் முதல்வர் ஸ்டாலினும் திட்டமிட்டு உள்ளனராம்.

HIGHLIGHTS

எடப்பாடியை கூட விடக்கூடாது! ஆளுநரை வைத்து அதிமுகவிற்கு செக்..!
X

முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி 

ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. தமிழக சட்டசபை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் உள்ளது.

இதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.

கடந்த 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. நேற்று இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் செயலற்றவராக இருக்கிறார், ஆளுநர் ரவியின் செயல்பட்டால் பெரும் அரசியலமைப்பு சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டி உள்ளது. அதில், ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டு பொருளாக நினைத்து செயல்படுகிறார்

தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை தமிழ்நாடு ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதில் குறுக்கே நிற்கிறார் என்று வழக்கில் தமிழ்நாடு அரசு கூறியது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு முக்கியமான உத்தரவுகளை பிறப்பிக்கலாம். முக்கியமாக மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கையில் அவர் இன்னும் கையெழுத்து போடவில்லை. இதில் கையெழுத்து போட வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பப்பட்டது.

இது தொடர்பான கோரிக்கையும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுவாக வைக்கப்பட்டு உள்ளது. அதாவது அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகளை பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கோடநாடு வழக்கிலும் கூட எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஆளுநருக்கு எதிராக தொடுக்கப்பட்டு உள்ள இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு முக்கியமான உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் இந்த கோரிக்கைகள் மீது கையெழுத்து போடும் பட்சத்தில் தேர்தல் சமயத்தில், தேர்தல் நெருங்கும் முன் சில மாஜி அமைச்சர்கள் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

முக்கியமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு பதிலடியாக அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஆளுநர் போடும் கையெழுத்தை வைத்து திமுகவினருக்கு எதிராகவே வழக்கு நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் பிளான் போட்டு வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?: இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையான கண்டங்களை ஆளுநர் ரவிக்கு எதிராக வைத்தார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. காரணம் ஏதும் கூறாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை, மீண்டும் பேரவை நிறைவேற்றி அனுப்பியதால் அவற்றுக்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.

காரணம் ஏதும் கூறாததால், மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கும் ஆளுநரால் அனுப்பி வைக்க முடியாது. காரணத்தோடு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தால் மட்டுமே, மீண்டும் திருப்பி அனுப்பும்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்.

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? நவம்பர் 10-ந் தேதி உத்தரவிட்ட பின்னர் நவம்பர் 13-ந் தேதி மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கிறாரே என்று உச்ச நீதிமன்றம் கூறியது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய கருத்தால், தமிழ்நாடு அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டிய நிலைக்கு ஆளுநர் தள்ளப்பட்டுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். மற்ற விசாரணைகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்குவோம் என்றும் கூறியுள்ளார். இவை ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 22 Nov 2023 5:07 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்