/* */

அ.தி.மு.க.,- பா.ஜ.க., உறவு முறிவு: தி.மு.க.,விற்கு புது சிக்கல்?

அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணி முறிவால் தி.மு.க.,விற்கு தான் தற்போது புது சிக்கல் உருவாகி உள்ளது.

HIGHLIGHTS

அ.தி.மு.க.,- பா.ஜ.க., உறவு முறிவு: தி.மு.க.,விற்கு புது சிக்கல்?
X

அதிமுக பாஜக கூட்டணி முறிந்து விட்டது. இனி கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது. கூட்டணி முறிவு என்பது தமிழகத்திற்கு புதிதல்ல. 1967 இருந்து ஏகபபட்ட கூட்டணிகளை கண்டது தமிழகம். ஆளாளுக்கு கூட்டணிகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

பிராமண எதிர்ப்பை காட்டிய திமுக, ராஜாஜியோடு கூட்டு சேர்ந்தது. இந்திராவும் கருணாநிதியும் கூட்டணி அமைத்தார்கள். இந்திரா- எம்ஜிஆர், ராஜிவ்- ஜெயலலிதா, வாஜ்பாய்- கருணாநிதி, பின் சோனியா- கருணாநிதி என எவ்வளவோ கூட்டணிகள் கண்ட தமிழகம் இது. அதனால் தற்போதைய செய்தியில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

பொதுவாக கூட்டணிகள் அமையும் போது அரசியல் சூழலை அவசியம் காண வேண்டும். அது தான் கூட்டணிகளின் பலனை நிர்ணயிக்கும். முன்பு வலுவான தேசிய தலைமை, வலுவான கட்சி தலைமை டெல்லியில் இல்லா காலங்களில், தமிழக எம்பி.,க்கள் பலம் ஆட்சி அமைக்க அவசியம் என்ற ஒரு காலம் இருந்தது. இந்த காலங்களில் இந்த கூட்டணிகள் முக்கியத்துவம் பெற்றன‌.

இப்போது அப்படி அல்ல. தேசிய அளவில் இன்றைய பெரும் சக்தி பாஜக. இதற்கு தமிழக எம்.பி.,க்கள், அதாவது. திமுக, அதிமுக எம்பிக்கள் அவசியமே இல்லை எனும் வகையில் தேசிய அளவில் பா.ஜ.க., பெரும் பலமாக நிற்கின்றார்கள்.

இப்போது அதிமுக வேண்டாம் என சொல்லும் நிலையில் பாஜக தான் பலமாக இருக்கின்றது. ஆனால் அதிமுக வாயால் சொல்ல வைத்து விட்டார்கள். இதனால் யாருக்கு லாபம் என்றால் அது பின்னர் தான் தெரியும்


முதல் நஷ்ட கணக்கு திமுகவிற்கு. அதுதான் இங்கே சரியான கணக்கு. சுமார் 20 ஆண்டு காலம் காங்கிரசோடு வலுவான கூட்டணி வைத்த கட்சி திமுக. அதோடு கம்யூனிஸ்டுகள் உதிரி கட்சிகள் என தி.மு.க.,வின் கூட்டணி பலம் அதிகம். மிக முக்கியமாக கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மை வாக்குகளை தனியே அள்ளி சென்ற கட்சி திமுக‌ தான். இப்போது அதற்குத்தான் வெடி விழுந்திருக்கின்றது.

எப்போதுமே காங்கிரசின் விருப்பமான கட்சி அதிமுக தான். காரணம் கொஞ்சம் சம்பாதிக்கவும் விடுவார்கள் பெரிய கடிவாளமெல்லாம் இடமாட்டார்கள். இப்போது வேறு வழியில்லாமலே காங்கிரசும் இதர கட்சிகளும் பெரும் சங்கடத்திற்கு இடையில் திமுகவில் நீடிக்கின்றன. தி.மு.க.,வில் பல கோஷ்டிகள் உள்ளன. செந்தில் பாலாஜி விவகாரம் என சிக்கல்கள் தி.மு.க.,விற்கு உள்ளன. இதனால் கூட்டணி கட்சிகள் எல்லாம் பெரும் சங்கடத்தில் இருக்கின்றன‌.

இதுவரை அ.தி.மு.க.,வுடன் பா.ஜ.க., இருந்ததால், மற்ற கட்சிகளால் அதிமுக பக்கம் தாவ முடியவில்லை. தற்போது அ.தி.மு.க.,வை சுற்றி இருந்த சிக்கல் விலகி விட்டது. இந்த கூட்டணி விலகல் பல கட்சிகளுக்கு சாகமாக உள்ளது. அப்படியே சிறுபான்மை ஓட்டுக்களும் தி.மு.க.,வுடன் முழு விருப்பத்துடன் இல்லை. இந்த சூழலில் தி.மு.க., ஆட்சி மீது சிறுபான்மையினருக்கும் சில, சில அதிருப்திகள் இருக்கத்தான் செய்கின்றன. இதனால் இனி அவைகளும் தேர்தல் கணக்குகளை திருப்பும்.

இப்படி பல விதங்களில் திமுக பலமிழக்கும். கூட்டணி இழப்பு, சிறுபான்மை வாக்கு இழப்பு என பல வகைகளில் அங்கு சேதம் ஏற்பட்டு வருகிறது. இப்படி இருபக்கமும் வாக்குகளை பிரிக்கும் போது தேர்தலில் பாஜகவுக்கு சில அனுகூலங்களை கொடுக்கும்.

காங்கிரஸ் பலவீனபட்டிருந்தாலும் அதற்கு ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இன்றும் தமிழகத்தில் உண்டு. திமுக காங்கிரஸ் இல்லாத காலங்களில் இந்த கட்சிகள் தனியாக பெரும் வெற்றி எதையும் பெற்றதில்லை என்பது வரலாறு. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை.

ஆனால் இது அரசியல். காங்கிரசுக்கும் அதன் கட்சி முக்கியம். வளர்ச்சியும் நிலைப்பும் முக்கியம். அங்கும் அனுபவம் வாய்ந்தவர்கள் உண்டு. கிடைத்த வாய்ப்பில் பழைய அதிமுக காங்கிரஸ் உறவை மிக இறுக்கமாக்க அவர்கள் முயற்சிக்கலாம். காங்கிரசுக்கு அதிமுக தான் விருப்பமான கட்சி. அதன் கடந்த கால தரவுகள் படி நீண்டகால கூட்டணி அதுதான். ஜெயலலிதாவுக்கும் சோனியாவுக்கும் முறுகல் வந்த காலங்களில் தான் திமுக பக்கம் வந்தார்கள். மற்றபடி திமுக அவர்களின் மனமார்ந்த கூட்டணி அல்ல‌.

இதனால் திமுக இனி கொஞ்சம் நெருக்கடிக்குள்ளாகும். காங்கிரஸ் நகர்ந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கூட்டணியை மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் பரிசீலிக்க வாய்ப்பு உண்டு. அதிமுக வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கின்றது. ஒரு வெற்றியினை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். பாஜகவும் இல்லா இடத்தில் பழிசொல்லவும் யாருமில்லை. இனி வெல்லாவிட்டால் கட்சி எழமுடியாதவாறு சரிந்தே விடும். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு சீட்டுக்களையும், இதர வசதிகளையும் அள்ளிக் கொடுப்பார்கள். பெரும் கூட்டணி அமைப்பார்கள். தங்களின் எல்லா பலத்தையும் காட்டுவார்கள் அது இயல்பு.

பாஜகவினை பொறுத்தவரை அது புன்னகைக்கின்றது. அவர்களின் பெரும் எதிரி காங்கிரஸ். அந்த அகில இந்திய கூட்டணியில் இருந்து திமுகவினை விலக்கினால் அது பா.ஜ.க.,விற்கு கிடைத்த பெரும் வெற்றி. தேசிய அளவில் காங்கிரஸை பலவீனபடுத்துவதில் வெற்றியினை நெருங்கி விட்டார்கள்.

இனி பாஜக தமிழகத்தில் சில நாட்கள் அமைதி காக்கும். பசும்பொன் தேவரை பற்றி அண்ணாமலை பேசியதெல்லாம் மிக திட்டமிட்டபட்ட துல்லியமான அரசியல். எல்லாம் கணித்து சரியாக அரசியல் செய்து விட்டார்கள். இனி சில கூட்டணிகளை அமைத்தால் போதும் தெற்கே அதிமுக வரவே முடியாது. பாஜகவுக்கு அது ஒரு பலமாக அமையும். ஆக எப்படி பார்த்தாலும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் பெரும் காரியத்தை பாஜக செய்திருக்கின்றது.

இதனாலே திமுக தரப்பு பெரும் மௌனத்தில் இருக்கின்றது. பாஜக இல்லாத அதிமுக பக்கம் செல்லும் தன் கூட்டணிகளை தடுப்பது தி.மு.க.,விற்கு எளிதாக இருக்காது. இப்போதைக்கு சூழ்நிலை பாஜகவுக்கு அனுகூலம். திமுகவுக்கு கொஞ்சம் பதற்றம்.

அதிமுகவுக்கு வாழ்வா சாவா போராட்டம் என்பதை தாண்டி எதுவும் சொல்லமுடியாது, சில நாட்கள் கழிந்து தேர்ந்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும். அதுவரை தமிழக ஊடகங்கள், யூ டியூபர்களுக்கு பொழுது போகும். ஏதாவது பேசி சிரித்து பரபரப்பு என ஓடிக்கொண்டே இருக்கும்.

ஆனால் அண்ணாமலை என்பவரின் கரங்களை, வார்த்தை வீச்சுக்களை இனி அதிமுக பகிரங்கமாக எதிர்கொள்ள வேண்டும். சில அதிமுக பிம்பங்கள் சுக்குநூறாக உடைக்கப்படலாம்.

Updated On: 27 Sep 2023 6:34 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  3. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  4. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  5. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  6. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  8. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  9. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  10. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!